பாடல் 27 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 27 · புலவர் பாடும் புகழ் · உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன,வேற்றுமை ‘இல்லா விழுத்திணைப் பிறந்து,வீற்றிருந் தோரை எண்ணுங் காலை,உரையும் பாட்டும் உடையோர் சிலரே;மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே:‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்வலவன் ஏவா வான ஊர்திஎய்துப என்ப, தம் செய்வினை முடித்து’ எனக்கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி!தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,அறியா தோரையும், அறியக் காட்டித்,திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து,வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,அருள வல்லை ஆகுமதி; அருளிலர்கொடா அமை வல்லர் ஆகுக;கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே.
பகிர்
கதை

புலவர் பாடும் புகழ் · உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

திணை: பொதுவியல் · துறை: முதுமொழிக் காஞ்சி · பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி