பாடல் 302 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 302 · வேலின் அட்ட களிறு? · வெறிபாடிய காமக் கண்ணியார் (காமக் கணியார் எனவும் பாடம்)

வெடிவேய் கொள்வது போல ஓடித்தாவுபு உகளும், மாவே; பூவே,விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட;நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றியஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய,நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்;நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி,வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்,விண்ணிவர் விசும்பின் மீனும்,தண்பெயல் உறையும், உறையாற் றாவே.
பகிர்
கதை

வேலின் அட்ட களிறு? · வெறிபாடிய காமக் கண்ணியார் (காமக் கணியார் எனவும் பாடம்)

திணை: தும்பை · துறை: குதிரை மறம்