பெருந்துறை மரனே · பரணர்
திணை: காஞ்சி · துறை: மகட்பாற் காஞ்சி
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்,கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக்,கள்ளரிக்கும் குயம், சிறுசின்மீன் சீவும் பாண் சேரி,வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன,குவளை உண்கண் இவளைத், தாயேஈனா ளாயினள் ஆயின், ஆனாதுநிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின்தொறும்,செந்நுதல் யானை பிணிப்ப,வருந்தல மன் - எம் பெருந்துறை மரனே.
திணை: காஞ்சி · துறை: மகட்பாற் காஞ்சி