பாடல் 356 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 356 · காதலர் அழுத கண்ணீர் · தாயங்கண்ணனார்

களரி பரந்து, கள்ளி போகிப்,பகலும் கூஉம் கூகையடு, பிறழ்பல்,ஈம விளக்கின், பேஎய் மகளிரொடுஅஞ்சுவந் தன்று, இம் மஞ்சுபடு முதுகாடு;நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப,எல்லார் புறனும் தான்கண்டு, உலகத்துமன்பதைக் கெல்லாம் தானாய்த்,தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே.
பகிர்
கதை

காதலர் அழுத கண்ணீர் · தாயங்கண்ணனார்

திணை: காஞ்சி · துறை: பெருங்காஞ்சி