நெய்தல் · உலோச்சனார்
தோழி வரைவு கடாயது. · உலோச்சனார் பாடியது
அரையுற் றமைந்த ஆரம் நீவிப்புரையப் பூண்ட கோதை மார்பினைநல்லகம் வடுக்கொள முயங்கி நீவந்தெல்லினிற் பெயர்தல் எனக்குமா ரினிதேபெருந்திரை முழக்கமொ டியக்கவிந் திருந்தகொண்டல் இரவின் இருங்கடல் மடுத்தகொழுமீன் கொள்பவர் இருள்நீங் கொண்சுடர்ஓடாப் பூட்கை வேந்தன் பாசறைஆடியல் யானை அணிமுகத் தசைத்தஓடை ஒண்சுடர் ஒப்பத் தோன்றும்பரியுடை நற்றேர்ப் பெரியன் விரியிணர்ப்புன்னையங் கானற் புறந்தை முன்றுறைவம்ப நாரை யினனொலித் தன்னஅம்பல் வாய்த்த தெய்ய தண்புலர்வைகுறு விடியல் போகிய எருமைநெய்தலம் புதுமலர் மாந்தும்கைதையம் படப்பைஎம் மழுங்க லூரே.
Araiyur ramaintha aaram neevip / Puraiyap poonta koathai maarpinai / Nallakam vatukkola muyangki neevan / Thellinir peyarthal enakkumaa rinithae / Perunthirai muzhakkamo tiyakkavin thiruntha / Kontal iravin irungkatal matuththa / Kozhumeen kolpavar irulneeng konsutar / Oataap pootkai vaenthan paasarai / Aatiyal yaanai animukath thasaiththa / Oatai onsutar oppath thoanrum / Pariyutai narraerp periyan viriyinarp / Punnaiyang kaanar puranthai munrurai / Vampa naarai yinanolith thanna / Ampal vaayththa theyya thanpular / Vaikuru vitiyal poakiya erumai / Neythalam puthumalar maanthum / Kaithaiyam patappaiem mazhungka loorae.
தோழி வரைவு கடாயது. · உலோச்சனார் பாடியது