பாலை · தாயங்கண்ணனார்
மகட்போக்கிய தாய் சொல்லியது · தாயங்கண்ணனார் பாடியது
அகல் அறை மலர்ந்த அரும்புமுதிர் வேங்கைஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லெனநல்வரை நாடன் தற்பா ராட்டயாங்குவல் லுநள்கொள் தானே - தேம்பெய்துமணிசெய் மண்டைத் தீம்பால் ஏந்திஈனாத் தாயார் மடுப்பவும் உண்ணாள்,நிழற்கயத் தன்ன நீணகர் வரைப்பின்எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம்மருண்டுபந்துபுடைப் பன்ன பாணிப் பல்லடிச்சில்பரிக் குதிரை, பல்வேல் எழினிகெடல் அருந் துப்பின் விடுதொழில் முடிமார்,கனைஎரி நடந்த கல்காய் கானத்துவினைவல் அம்பின் விழுத்தொடை மறவர்தேம்பிழி நறுங்கள் மகிழின், முனைகடந்துவீங்குமென் சுரைய ஏற்றினம் தரூஉம்முகைதலை திறந்த வேனிற்பகைதலை மணந்த பல் அதர்ச் செலவே !
மகட்போக்கிய தாய் சொல்லியது · தாயங்கண்ணனார் பாடியது