பாடல் 109 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 109 · பாலை · கடுந்தொடைக் காவினார்

பல்லிதழ் மென்மலர் உண்கண் நல்யாழ்நரம்பிசைத் தன்ன இன்றீங் கிளவிநலநல் கொருத்தி இருந்த ஊரேகோடுழு களிற்றின் தொழுதி ஈண்டிக்காடுகால் யாத்த நீடுமரச் சோலைவிழைவெளில் ஆடுங் கழைவளர் நனந்தலைவெண்ணுனை யம்பின் விசையிட வீழ்ந்தோர்எண்ணுவரம் பறியா உவலிடு பதுக்கைச்சுரங்கெழு கவலை கோட்பாற் பட்டெனவழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்கைப்பொருள் இல்லை யாயினும் மெய்க்கொண்டின்னுயிர் செகாஅர் விட்டகல் தப்பற்குப்பெருங்களிற்று மருப்பொடு வரியதள் இறுக்கும்அறனில் வேந்தன் ஆளும்வறனுறு குன்றம் பலவிலங் கினவே.
பகிர்
கதை

பாலை · கடுந்தொடைக் காவினார்

இடைச்சுரத்துத் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · கடுந்தொடைக் காவினார் பாடியது