பாலை · கல்லாடனார்
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. · கல்லாடனார் பாடியது
நன்றல் காலையும் நட்பிற் கோடார்சென்று வழிப்படூஉந் திரிபில் சூழ்ச்சியில்புன்றலை மடப்பிடி அகவுநர் பெருமகன்அமர்வீசு வண்மகிழ் அஃதைப் போற்றிக்காப்புக்கை நிறுத்த பல்வேற் கோசர்இளங்கள் கமழும் நெய்தலம் செறுவின்வளங்கெழு நன்னா டன்னவென் தோள்மனந்தழுங்கல் மூதூர் அலரெடுத் தரற்றநல்காது துறந்த காதலர் என்றும்கல்பொரூஉ மெலியாப் பாடினோன் அடியன்அல்கு வன்சுரைப் பெய்த வல்சியன்இகந்தன வாயினும் இடம்பார்த்துப் பகைவர்ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பில்குவையிமில் விடைய வேற்றா ஒய்யும்கணையிருஞ் சுருணைக் கனிகாழ் நெடுவேல்விழவயர்ந் தன்ன கொழும்பல் திற்றிஎழாஅப் பாணன் நன்னாட் டும்பர்நெறிசெல் வம்பலர் கொன்ற தெவ்வர்எறிபடை கழீஇய சேயரிச் சின்னீர்அறுதுறை யயிர்மணல் படுகரைப் போகிச்சேயர் என்றலில் சிறுமை யுற்றவென்கையறு நெஞ்சத் தெவ்வம் நீங்கஅழாஅம் உறைதலும் உரியம் பராரைஅலங்கல் அஞ்சினைக் குடம்பை புல்லெனப்புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந் தாங்குமெய்யிவ ணொழியப் போகிஅவர்செய்வினை மருங்கில் செலீஇயரென் உயிரே.
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. · கல்லாடனார் பாடியது