பாடல் 115 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 115 · பாலை · மாமூலனார்

அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்ப்பழியிலர் ஆயினும் பலர்புறங் கூறும்அம்பல் ஒழுக்கமும் ஆகிய வெஞ்சொற்சேரியம் பெண்டிர் எள்ளினும் எள்ளுகநுண்பூண் எருமை குடநாட் டன்னஎன்ஆய்நலம் தொலையினும் தொலைக என்றும்நோயில ராகநம் காதலர் வாய்வாள்எவ்வி வீழ்ந்த செருவிற் பாணர்கைதொழு மரபின்முன் பரித்திடூஉப் பழிச்சியவள்ளுயிர் வணர்மருப் பன்ன ஒள்ளிணர்ச்சுடர்ப்பூங் கொன்றை ஊழுறு விளைநெற்றுஅறைமிசைத் தாஅம் அத்தம் நீளிடைப்பிறைமருள் வான்கோட் டண்ணல் யானைச்சினமிகு முன்பின் 1வாமான் அஞ்சிஇனங்கொண் டொளிக்கும் அஞ்சுவரு கவலைநன்னர் ஆய்கவின் தொலையச் சேய்நாட்டுநந்நீத் துறையும் பொருட்பிணிக்கூடா மையின் நீடி யோரே.
பகிர்
கதை

பாலை · மாமூலனார்

பிரிவிடை வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. · மாமூலனார் பாடியது