பாடல் 101 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 101 · பாலை · மாமூலனார்

அம்ம வாழி தோழி யிம்மைநன்றுசெய் மருங்கில் தீதில் என்னும்தொன்றுபடு பழமொழி யின்றுபொய்த் தன்றுகொல்தகர்மருப் பேய்ப்பச் சுற்றுபு சுரிந்தசுவன்மாய் பித்தைச் செங்கண் மழவர்வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றிநுறைதெரி மத்தங் கொளீஇ நிரைப்புறத்தடிபுதை தொடுதோல் பறைய வேகிக்கடிபுலங் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்இனந்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டகலிரு விசும்பிற் கோடம் போலப்பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்றுருப்பவிர் பூரிய சுழன்றுவரு கோடைப்புன்கால் முருங்கை ஊழ்கழி பன்மலர்தண்கார் ஆலியில் தாவன உதிரும்பனிபடு பன்மலை இறந்தோர்க்குமுனிதகு பண்பியாஞ் செய்தன்றோ விலமே.

Amma vaazhi thoazhi yimmai / Nanrusey marungkil theethil ennum / Thonrupatu pazhamozhi yinrupoyth thanrukol / Thakarmarup paeyppas surrupu surintha / Suvanmaay piththais sengkan mazhavar / Vaayppakai katiyum mannotu katunthiral / Theeppatu sirukoal villotu parri / Nuraitheri maththang koleei niraippurath / Thatiputhai thotuthoal paraiya vaekik / Katipulang kavarntha kanrutaik kollaiyar / Inanthalai peyarkkum nananthalaip perungkaat / Takaliru visumpir koatam poalap / Pakalitai ninra palkathir njaayir / Ruruppavir pooriya suzhanruvaru koataip / Punkaal murungkai oozhkazhi panmalar / Thankaar aaliyil thaavana uthirum / Panipatu panmalai iranthoarkku / Munithaku panpiyaanj seythanroa vilamae.

பகிர்
கதை

பாலை · மாமூலனார்

பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, தோழிக்குச் சொல்லியது; தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉமாம். · மாமூலனார் பாடியது