பாடல் 169 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 169 · பாலை · தொண்டி ஆமூர்ச்சாத்தனார்

மரந்தலை கரிந்து நிலம்பயம் வாடஅலங்குகதிர் வேய்ந்த அழல்திகழ் நனந்தலைப்புலிதொலைத் துண்ட பெருங்களிற்று ஒழிஊன்கலிகெழு மறவர் காழ்க்கோத் தொழிந்ததைஞெலிகோல் சிறுதீ மாட்டி ஒலிதிரைக்கடல்விளை அமிழ்தின் கணஞ்சால் உமணர்சுனைகொள் தீநீர்ச் சோற்றுலைக் கூட்டுஞ்சுரம்பல கடந்த நம்வயிற் படர்ந்துநனிபசலை பாய்ந்த மேனியள் நெடிதுநினைந்துசெல்கதிர் 2மழுகிய புலம்புகொள் மாலைமெல்விரல் சேர்த்திய நுதலள் மல்கிக்கயலுமிழ் நீரிற் கண்பனி வாரப்பெருந்தோள் 3நெகிழ்ந்த செல்லலொடுவருந்துமால் அளியள் திருந்திழை தானே.

Maranthalai karinthu nilampayam vaata / Alangkukathir vaeyntha azhalthikazh nananthalaip / Pulitholaith thunta perungkalirru ozhioon / Kalikezhu maravar kaazhkkoath thozhinthathai / Njelikoal siruthee maatti olithiraik / Katalvilai amizhthin kananjaal umanar / Sunaikol theeneers soarrulaik koottunj / Surampala katantha namvayir patarnthunani / Pasalai paayntha maeniyal netithuninainthu / Selkathir 2mazhukiya pulampukol maalai / Melviral saerththiya nuthalal malkik / Kayalumizh neerir kanpani vaarap / Perunthoal 3nekizhntha sellalotu / Varunthumaal aliyal thirunthizhai thaanae.

பகிர்
கதை

பாலை · தொண்டி ஆமூர்ச்சாத்தனார்

தலைமகன்,இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · தொண்டி ஆமூர்ச்சாத்தனார் பாடியது