முல்லை · மதுரை மருதன் இளநாகனார்
தலைமகன் வினைவயிற்பிரிந்து வந்து எய்தியவிடத்து தோழி புல்லுமகிழ்வு உரைத்தது. · மதுரை மருதன் இளநாகனார் பாடியது
கடவுட் கற்பொடு குடிக்குவிளக் காகியபுதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்நன்ன ராட்டிக் கன்றியும் எனக்கும்இனிதா கின்றால் சிறக்கநின் ஆயுள்அருந்தொழில் முடித்த செம்மல் உள்ளமொடுசுரும்பிமிர் மலர கானம் பிற்படவெண்பிடவு அவிழ்ந்த வீகமழ் புறவில்குண்டைக் கோட்ட குறுமுள் கள்ளிப்புன்தலை புதைத்த கொழுங்கொடி முல்லைஆர்கழல் புதுப்பூ உயிர்ப்பின் நீக்கித்தெள்ளறல் பருகிய திரிமருப்பு எழிற்கலைபுள்ளிஅம் பிணையொடு வதியும் ஆங்கண்கோடுடைக் கையர் துளர்எறி வினைஞர்அரியல் ஆர்கையர் விளைமகிழ் தூங்கச்செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச்செக்கர் வானஞ் சென்ற பொழுதில்கற்பால் அருவியின் ஒலிக்கும் நற்தேர்த்தார்மணி பலவுடன் இயம்பச்சீர்மிகு குரிசில்நீ வந்துநின் றதுவே.
Katavut karpotu kutikkuvilak kaakiya / Puthalvar payantha pukazhmiku sirappin / Nanna raattik kanriyum enakkum / Inithaa kinraal sirakkanin aayul / Arunthozhil mutiththa semmal ullamotu / Surumpimir malara kaanam pirpata / Venpitavu avizhntha veekamazh puravil / Kuntaik koatta kurumul kallip / Punthalai puthaiththa kozhungkoti mullai / Aarkazhal puthuppoo uyirppin neekkith / Thellaral parukiya thirimaruppu ezhirkalai / Pulliam pinaiyotu vathiyum aangkan / Koatutaik kaiyar thulareri vinainjar / Ariyal aarkaiyar vilaimakizh thoongkas / Selkathir mazhukiya uruva njaayirrus / Sekkar vaananj senra pozhuthil / Karpaal aruviyin olikkum narthaerth / Thaarmani palavutan iyampas / Seermiku kurisilnee vanthunin rathuvae.
தலைமகன் வினைவயிற்பிரிந்து வந்து எய்தியவிடத்து தோழி புல்லுமகிழ்வு உரைத்தது. · மதுரை மருதன் இளநாகனார் பாடியது