பாடல் 238 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 238 · குறிஞ்சி · – கபிலர்

மான்றமை யறியா மரம்பயில் இறும்பின்ஈன்றிளைப் பட்ட வயவுப்பிணப் பசித்தெனமடமான் வல்சி தரீஇய நடுநாள்இருண்முகைச் சிலம்பின் இரைவேட் டெழுந்தபனைமருள் எருத்திற் பல்வரி இரும்போத்துமடக்கண் ஆமான் மாதிரத்து அலறத்தடக்கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறுநனந்தலைக் கானத்து வலம்படத் தொலைச்சிஇருங்கல் வியலறை சிவப்ப ஈர்க்கும்பெருங்கல் நாட பிரிதி யாயின்மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்குஇழையணி நெடுந்தேர் களிறொடு என்றும்மழைசுரந் தன்ன ஈகை வண்மகிழ்க்கழல்தொடித் தடக்கைக் 2கலிமான் நள்ளிநளிமுகை யுடைந்த நறுங்கா ரடுக்கத்துப்போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள்மென்பிணி முகையவிழ்ந் தலர்ந்ததண்கமழ் புதுமலர் நாறும்நறு நுதற்கே.

Maanramai yariyaa marampayil irumpin / Eenrilaip patta vayavuppinap pasiththena / Matamaan valsi thareeiya natunaal / Irunmukais silampin iraivaet tezhuntha / Panaimarul eruththir palvari irumpoaththu / Matakkan aamaan maathiraththu alarath / Thatakkoattu aamaan annal aeeru / Nananthalaik kaanaththu valampatath tholaissi / Irungkal viyalarai sivappa eerkkum / Perungkal naata pirithi yaayin / Marunthum utaiyaiyoa marrae irappoarkku / Izhaiyani netunthaer kalirotu enrum / Mazhaisuran thanna eekai vanmakizhk / Kazhalthotith thatakkaik 2kalimaan nalli / Nalimukai yutaintha narungkaa ratukkaththup / Poanthai muzhumuthal nilaiiya kaanthal / Menpini mukaiyavizhn thalarntha / Thankamazh puthumalar naarumnaru nutharkae.

பகிர்
கதை

குறிஞ்சி · - கபிலர்

இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. · - கபிலர் பாடியது