பாலை · எயினந்தை மகனிளங்கீரனார்
பொருள்வயிற் பிரிந்துபோகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · எயினந்தை மகனிளங்கீரனார் பாடியது
அளிதோ தானே எவனா வதுகொல்மன்றும் தோன்றாது மரனும் மாயும்புலியென உலம்பும் செங்கண் ஆடவர்ஞெலியொடு பிடித்த வார்கோல் அம்பினர்எல்லூர் எறிந்து பல்ஆத் தழீஇயவிளிபடு பூசல் வெஞ்சுரத்து இரட்டும்வேறுபல் தேஎத்து ஆறுபல நீந்திப்புள்ளித் தொய்யில் பொறிபடு சுணங்கின்ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்புல்லென் மாலை யாமிவண் ஒழியஈட்டருங் குரைய பொருள்வயின் செலினேநீட்டுவிர் அல்லிரோ நெடுந்தகை யீரெனக்குறுநெடும் புலவி கூறி நம்மொடுநெருநலுந் தீம்பல மொழிந்தசிறுநல் ஒருத்தி பெருநல் லூரே.
Alithoa thaanae evanaa vathukol / Manrum thoanraathu maranum maayum / Puliyena ulampum sengkan aatavar / Njeliyotu pitiththa vaarkoal ampinar / Elloor erinthu palaath thazheeiya / Vilipatu poosal venjuraththu irattum / Vaerupal thaeeththu aarupala neenthip / Pullith thoyyil poripatu sunangkin / Ollizhai makalir uyarpirai thozhooum / Pullen maalai yaamivan ozhiya / Eettarung kuraiya porulvayin selinae / Neettuvir alliroa netunthakai yeerenak / Kurunetum pulavi koori nammotu / Nerunalun theempala mozhintha / Sirunal oruththi perunal loorae.
பொருள்வயிற் பிரிந்துபோகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · எயினந்தை மகனிளங்கீரனார் பாடியது