பாலை · குடவாயிற் கீரத்தனார்
பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச்சுரத்து நின்ற தன்னெஞ்சிற்குச் சொல்லியது. · குடவாயிற் கீரத்தனார் பாடியது
தொடியணி முன்கைத் தொகுவிரல் குவைஇப்படிவ நெஞ்சமொடு பகல்துணை யாகநோங்கொல் அளியள் தானே தூங்குநிலைமரையேறு சொறிந்த மாத்தாள் கந்தின்சுரையிவர் பொதியில் அங்குடிச் சீறூர்நாட்பலி மறந்த நரைக்கண் இட்டிகைப்புரிசை மூழ்கிய பொரியரை ஆலத்துஒருதனி நெடுவீழ் உதைத்த கோடைதுணைப்புறா இரிக்குந் தூமழை நனந்தலைக்கணைக்கால் அம்பிணை ஏறுபுறம் நக்கஒல்குநிலை யாஅத்து ஓங்குசினை பயந்தஅல்குறு வரிநிழல் அசையினம் நோக்கஅரம்புவந்து அலைக்கும் மாலைநிரம்பா நீளிடை வருந்துதும் யாமே.
Thotiyani munkaith thokuviral kuvaiip / Pativa nenjamotu pakalthunai yaaka / Noangkol aliyal thaanae thoongkunilai / Maraiyaeru sorintha maaththaal kanthin / Suraiyivar pothiyil angkutis seeroor / Naatpali marantha naraikkan ittikaip / Purisai moozhkiya poriyarai aalaththu / Oruthani netuveezh uthaiththa koatai / Thunaippuraa irikkun thoomazhai nananthalaik / Kanaikkaal ampinai aerupuram nakka / Olkunilai yaaaththu oangkusinai payantha / Alkuru varinizhal asaiyinam noakka / Arampuvanthu alaikkum maalai / Nirampaa neelitai varunthuthum yaamae.
பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச்சுரத்து நின்ற தன்னெஞ்சிற்குச் சொல்லியது. · குடவாயிற் கீரத்தனார் பாடியது