பாலை · ------- எயினந்தை மகன் இளங்கீரனார்
பிரிந்து போகா நின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்சொல்லியது. · ------- எயினந்தை மகன் இளங்கீரனார் பாடியது
சிலையே றட்ட கணைவீழ் வம்பலர்நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டுஞ்சுரனிடை விலங்கிய மரனோங் கியவின்வந்துவினை வலித்த நம்வயின் என்றும்தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாதுநெகிழா மென்பிணி வீங்கிய கைசிறிதுஅவிழினும் உயவும் ஆய்மடத் தகுவிசேணுறை புலம்பின் நாண்முறை யிழைத்ததிண்சுவர் நோக்கி நினைந்து கண்பனிநெகிழ்நூல் முத்தின் முகிழ்முலைத் தெறிப்பமையற விரிந்த படையமை சேக்கைஐமென் தூவி அணைசேர் பசைஇமையல் கொண்ட மதனழி யிருக்கையள்பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவிநல்ல கூறென நடுங்கிப்புல்லென் மாலையொடு பொருங்கொல் தானே.
Silaiyae ratta kanaiveezh vampalar / Netunilai natukal naatpalik koottunj / Suranitai vilangkiya maranoang kiyavin / Vanthuvinai valiththa namvayin enrum / Therumaral ullamotu varunthal aanaathu / Nekizhaa menpini veengkiya kaisirithu / Avizhinum uyavum aaymatath thakuvi / Saenurai pulampin naanmurai yizhaiththa / Thinsuvar noakki ninainthu kanpani / Nekizhnool muththin mukizhmulaith therippa / Maiyara virintha pataiyamai saekkai / Aimen thoovi anaisaer pasaii / Maiyal konta mathanazhi yirukkaiyal / Pakuvaayp palli patuthorum paravi / Nalla koorena natungkip / Pullen maalaiyotu porungkol thaanae.
பிரிந்து போகா நின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்சொல்லியது. · ------- எயினந்தை மகன் இளங்கீரனார் பாடியது