பாடல் 338 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 338 · குறிஞ்சி · மதுரைக் கணக்காயனார்

குன்றோங்கு வைப்பின் நாடுமீக் கூறும்மறங்கெழு தானை அரச ருள்ளும்அறங்கடைப் பிடித்த செங்கோ லுடனமர்மறஞ்சாய்த் தெழுந்த வலனுயர் திணிதோட்பலர்புகழ் திருவிற் பசும்பூட் பாண்டியன்அணங்குடை உயர்நிலைப் பொருப்பிற் கவாஅன்சினையொண் காந்தள் நாறும் நறுநுதல்துணையீர் ஓதி மாஅ யோள்வயின்நுண்கோல் அவிர்தொடி 1வண்புறஞ் சுற்றமுயங்கல் இயையா தாயினும் என்றும்வயவுறு நெஞ்சத் துயவுத் துணையாகஒன்னார் தேஎம் பாழ்பட நூறும்துன்னரும் துப்பின் வென்வேற் பொறையன்அகலிருங் கானத்துக் கொல்லி போலத்தவா அ லியரோ நட்பே அவள்வாயின்அறா அ லியரோ தூதே பொறாஅர்விண்பெறக் கழித்த திண்பிடி யொள்வாட்புனிற்றான் தரவின் இளையர் பெருமகன்தொகுபோர்ச் சோழன் பொருண்மலி பாக்கதுவழங்க லானாப் பெருந்துறைமுழங்கிரு முந்நீர்த் திரையினும் பலவே.

Kunroangku vaippin naatumeek koorum / Marangkezhu thaanai arasa rullum / Arangkataip pitiththa sengkoa lutanamar / Maranjaayth thezhuntha valanuyar thinithoat / Palarpukazh thiruvir pasumpoot paantiyan / Anangkutai uyarnilaip poruppir kavaaan / Sinaiyon kaanthal naarum narunuthal / Thunaiyeer oathi maaa yoalvayin / Nunkoal avirthoti 1vanpuranj surra / Muyangkal iyaiyaa thaayinum enrum / Vayavuru nenjath thuyavuth thunaiyaaka / Onnaar thaeem paazhpata noorum / Thunnarum thuppin venvaer poraiyan / Akalirung kaanaththuk kolli poalath / Thavaa a liyaroa natpae avalvaayin / Araa a liyaroa thoothae poraaar / Vinperak kazhiththa thinpiti yolvaat / Punirraan tharavin ilaiyar perumakan / Thokupoars soazhan porunmali paakkathu / Vazhangka laanaap perunthurai / Muzhangkiru munneerth thiraiyinum palavae.

பகிர்
கதை

குறிஞ்சி · மதுரைக் கணக்காயனார்

அல்ல குறிப்பிட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · மதுரைக் கணக்காயனார் பாடியது