பாடல் 344 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 344 · முல்லை · மதுரை அளக்கர் ஞாழார் மகனார் 3மள்ளனார்

வளமழை பொழிந்த வானிறக் களரிதொகுமுகை விரிந்த முடக்காற் பிடவின்வையேர் வாலெயிற் றொண்ணுதல் மகளிர்கைமாண் தோளி கடுப்பப் பையெனமயிலினம் பயிலும் மரம்பயில் கானம்எல்லிடை யுறாஅ வளவை வல்லேகழலொலி நாவில் தெண்மணி கறங்கநிழலொலிப் பன்ன நிமிர்பரிப் புரவிவயக்குறு கொடிஞ்சி பொலிய வள்பாய்ந்துஇயக்குமதி வாழியோ கையுடை வலவபசப்புறு படரட வருந்தியநயப்பின் காதலி நகைமுகம் பெறவே.

Valamazhai pozhintha vaanirak kalari / Thokumukai virintha mutakkaar pitavin / Vaiyaer vaaleyir ronnuthal makalir / Kaimaan thoali katuppap paiyena / Mayilinam payilum marampayil kaanam / Ellitai yuraaa valavai vallae / Kazhaloli naavil thenmani karangka / Nizhalolip panna nimirparip puravi / Vayakkuru kotinji poliya valpaaynthu / Iyakkumathi vaazhiyoa kaiyutai valava / Pasappuru patarata varunthiya / Nayappin kaathali nakaimukam peravae.

பகிர்
கதை

முல்லை · மதுரை அளக்கர் ஞாழார் மகனார் 3மள்ளனார்

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. · மதுரை அளக்கர் ஞாழார் மகனார் 3மள்ளனார் பாடியது