பாடல் 351 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 351 · பாலை · பொருந்தில் இளங்கீரனார்

வேற்றுநாட் டுறையுள் விருப்புறப் பேணிப்பெறலருங் கேளிர் பின்வந்து விடுப்பப்பொருளகப படுத்த புகன்மலி நெஞ்சமொடுகுறைவினை முடித்த நிறைவின் இயக்கம்அறிவுறூஉங் கொல்லோ தானே கதிர்தெறக்கழலிலை புகுத்த கால்பொரு தாழ்சினைஅழலகைந் தன்ன அங்குழைப் பொதும்பிற்புழல்வீ யிருப்பைப் புன்காட் டத்தம்மறுதர லுள்ளமொடு குறுகத் தோற்றியசெய்குறி ஆழி வைகறோ றெண்ணிஎழுதுசுவர் 1நனைந்த அழுதுவார் மழைக்கண்விலங்கிவீழ் அரிப்பனி பொலங்குழைத் தெறிப்பத்திருந்திழை முன்கை அணலசைத் தூன்றிஇருந்தணை மீது 2பொருந்துழிக் கிடக்கைவருந்துதோட் பூசல் கணையு மருந்தெனபுள்ளுத்தொழு துறைவி செவிமுத லானே.

Vaerrunaat turaiyul viruppurap paenip / Peralarung kaelir pinvanthu vituppap / Porulakapa patuththa pukanmali nenjamotu / Kuraivinai mutiththa niraivin iyakkam / Arivurooung kolloa thaanae kathirtherak / Kazhalilai pukuththa kaalporu thaazhsinai / Azhalakain thanna angkuzhaip pothumpir / Puzhalvee yiruppaip punkaat taththam / Maruthara lullamotu kurukath thoarriya / Seykuri aazhi vaikaroa renni / Ezhuthusuvar 1nanaintha azhuthuvaar mazhaikkan / Vilangkiveezh arippani polangkuzhaith therippath / Thirunthizhai munkai analasaith thoonri / Irunthanai meethu 2porunthuzhik kitakkai / Varunthuthoat poosal kanaiyu marunthena / Pulluththozhu thuraivi sevimutha laanae.

பகிர்
கதை

பாலை · பொருந்தில் இளங்கீரனார்

பொருள்முற்றி மறுத்தராநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · பொருந்தில் இளங்கீரனார் பாடியது