பாலை · பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் பாடியது
முனைகவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பீரெழுந்துமனைபாழ் பட்ட மரைசேர் மன்றத்துப்பணைத்தாள் யானை பரூஉப்புற 4முரிஞ்சச்செதுகாழ சாய்ந்த முதுகாற் பொதியில்அருஞ்சுரம் நீந்திய வருத்தமொடு கையற்றப்பெரும்புன் மாலை புலம்புவந் துறுதரமீளி உள்ளஞ் செலவுவலி யுறுப்பத்தாள்கை பூட்டிய தனிநிலை யுணராள்இரும்பல் கூந்தற் சேயிழை மடந்தைகனையிருள் நடுநாள் அணையொடு பொருந்திவெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொ டைதுயிராஆயிதழ் மழைக்கண் மல்க நோய்கூர்ந்துபெருந்தோள் நனைக்குங் கலுழ்ந்துவார் அரிப்பனிமெல்விரல் உகிரிற் றெறியினள் வென்வேல்அண்ணல் யானை அடுபோர் வேந்தர்ஒருங்ககப் படுத்த முரவுவாய் ஞாயில்ஓரெயின் மன்னன் போலத்துயிறுறந் தனள்கொல் அளியள் தானே.
Munaikavarnthu kontenak kalangkip peerezhunthu / Manaipaazh patta maraisaer manraththup / Panaiththaal yaanai paroouppura 4murinjas / Sethukaazha saayntha muthukaar pothiyil / Arunjuram neenthiya varuththamotu kaiyarrap / Perumpun maalai pulampuvan thuruthara / Meeli ullanj selavuvali yuruppath / Thaalkai poottiya thaninilai yunaraal / Irumpal koonthar saeyizhai matanthai / Kanaiyirul natunaal anaiyotu porunthi / Veythurrup pulakkum nenjamo taithuyiraa / Aayithazh mazhaikkan malka noaykoornthu / Perunthoal nanaikkung kaluzhnthuvaar arippani / Melviral ukirir reriyinal venvael / Annal yaanai atupoar vaenthar / Orungkakap patuththa muravuvaay njaayil / Oareyin mannan poalath / Thuyiruran thanalkol aliyal thaanae.
பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் பாடியது