பாலை · நக்கீரர்
மகட் போக்கிய செவிலி சொல்லியது. · நக்கீரர் பாடியது
கண்டிசின் 1மகளே கெழீஇ இயைவெனைஒண்டொடி செறித்த முன்கை ஊழ்கொள்புமங்கையர் பலபா ராட்டச் செந்தார்க்கிள்ளையுந் தீம்பால் உண்ணா மயிலியற்சேயிழை மகளிர் ஆயமும் அயராதாழியும் மலர்பல அணியா கேழகொளகாழ்புனைந் தியற்றிய வனப்பமை நோன்சுவர்ப்இவைகண் டினைவதன் தலையும் நினைவிலேன்கொடியோள் முன்னிய துணரேன் தொடியோய்இன்றுநின் ஒலிகுரல் மண்ணல் என்றதற்குஎற்புலந் தழிந்தன ளாகித் தற்றக்கடலந் தானைக் கைவண் சோழர்கெடலரு நல்லிசை உறந்தை யன்னநிதியுடைய நன்னகர்ப் புதுவது புனைந்துதமர்மணன் அயரவும் ஒல்லாள் கவர்முதல்ஓமை நீடிய உலவை நீளிடைமணியணி பலகை மாக்காழ் நெடுவேல்துணியுடை உள்ளமொடு துதைந்த முன்பின்அறியாத் தேஎத்து அருஞ்சுரம் மடுத்தசிறியோற் கொத்தவென் பெரமடத் தகுவிசிறியோற் கொத்தவென் பெருமடத் தகுவிசிறப்புஞ் சீரும் இன்றிச் சீறூர்நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பைஓரா யாத்த ஒருதூண் முன்றில்ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇமேயினள் கொல்லென நோவல் யானே.
Kantisin 1makalae kezheei iyaivenai / Ontoti seriththa munkai oozhkolpu / Mangkaiyar palapaa raattas senthaark / Killaiyun theempaal unnaa mayiliyar / Saeyizhai makalir aayamum ayaraa / Thaazhiyum malarpala aniyaa kaezhakola / Kaazhpunain thiyarriya vanappamai noansuvarp / Ivaikan tinaivathan thalaiyum ninaivilaen / Kotiyoal munniya thunaraen thotiyoay / Inrunin olikural mannal enratharku / Erpulan thazhinthana laakith tharrak / Katalan thaanaik kaivan soazhar / Ketalaru nallisai uranthai yanna / Nithiyutaiya nannakarp puthuvathu punainthu / Thamarmanan ayaravum ollaal kavarmuthal / Oamai neetiya ulavai neelitai / Maniyani palakai maakkaazh netuvael / Thuniyutai ullamotu thuthaintha munpin / Ariyaath thaeeththu arunjuram matuththa / Siriyoar koththaven peramatath thakuvi / Siriyoar koththaven perumatath thakuvi / Sirappunj seerum inris seeroor / Nalkoor pentin pulvaey kurampai / Oaraa yaaththa oruthoon munril / Aethil varumanais silamputan kazheei / Maeyinal kollena noaval yaanae.
மகட் போக்கிய செவிலி சொல்லியது. · நக்கீரர் பாடியது