மருதம் · குடவாயிற் கீரத்தனார்
பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் வாயில் வேண்டியவிடத்துத் தோழி சொல்லியது. · குடவாயிற் கீரத்தனார் பாடியது
தாழ்சினை மருதம் தகைபெறக் கவினியநீர்சூழ வியன்களம் பொலியப் போர்பழித்துக்கள்ளார் களமர் பகடு 1தளை மாற்றிக்கடுங்காற் றெறியப் போகிய துரும்புடன்காயற் சிறுதடி கண்கெடப் பாய்தலின்இருநீர்ப் பரப்பிற் பனித்துறைப் பரதவர்தீம்பொழி வெள்ளுப்புச் சிதைதலற் சினைஇக்கழனி உழவரொடு மாறெதிர்ந்து மயங்கிஇருஞ்சேற் றள்ளல் எறிசெருக் கண்டுநரைமூ தாளர் கைபிணி விடுத்துநனைமுதிர் தேறல் நுளையர்க் கீயும்பொலம்பூண் எவ்வி நீழல் அன்னநலம்பெறு பணைத்தோள் நன்னுதல் அரிவையொடுமணங்கமழ் தண்பொழில் அல்கி நெருநைநீதற் பிழைத்தமை அறிந்துகலுழந்த கண்ணளெம் அணங்கன் னாளே.
பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் வாயில் வேண்டியவிடத்துத் தோழி சொல்லியது. · குடவாயிற் கீரத்தனார் பாடியது