பாடல் 393 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 393 · பாலை · மாமூலனார்

கோடுயர் பிறங்கற் குன்றுபல நீந்திவேறுபுலம் படர்ந்த வினைதரல் உள்ளத்துஆறுசெல் வம்பலர் 1காய்பசி தீரியஇதைச்சுவற் கலித்த ஈரிலை நெடுந்தோட்டுக்கவைக்கதர் வரகின் கால்தொகு பொங்குழிகவட்டடிப் பொருத 3பல்சினை உதிர்வைஅகன்கட் 4பாறைச் செவ்வயிற் றெறீஇவரியணி பணைத்தோள் 5வார்செவித் தன்னையர்பண்ணை வெண்பழத் தரிசி ஏய்ப்பச்சுழல்மரஞ் சொலித்த சுளகலை வெண்காழதொடிமாண் உலக்கை ஊழிற் போக்கிஆங்கண் இருஞ்சுனை நீரொடு முகவாக்களிபடு குழிசிக் கல்லடுப் பேற்றிஇணர்ததை கடுக்கை ஈண்டிய தாதிற்குடவா புபக்கிய பொங்கவிழ்ப் புன்கம்மதர்வை நல்லான் பாலொடு பகுக்கும்நிரைபல குழீஇய நெடுமொழிப் புல்லிதேன்றூங்கு உயர்வரை நன்னாட் டும்பர்வேங்கடம் இறந்தன ராயினும் ஆண்டவர்நீடலர் வாழி தோழி தோடுகொள்தகரம் மண்ணிய தண்ணறு முச்சிப்புகரில் குவளைப் போதொடு 6தெரியிதழ்வேனில் அதிரல் வேய்ந்தநின்ஏமுறு புணர்ச்சி இன்துயில் மறந்தே.
பகிர்
கதை

பாலை · மாமூலனார்

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. · மாமூலனார் பாடியது