பாலை · நக்கீரனார்
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்குந் தோழிக்குச் சொல்லியது. · நக்கீரனார் பாடியது
அறியாய் வாழ தோழ நெறிகுரல்சாந்தார் கூந்தல் உளரிப் போதணிந்துதேங்கமழ் திருநுதல் திலகம் தைஇயும்பல்லிதழ எதிர்மலர் கிள்ளி வேறுபடநல்லிள வனமுலை அல்லியொ டப்பியும்பெருந்தோள் தொய்யில் வரித்தும் சிறுபரட்டுஅஞ்செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்எற்புறந் தந்து நிற்பா ராட்டிப்பல்பூஞ் சேக்கையிற் பகலும் நீங்கார்மனைவயின் இருப்பவர் மன்னே துனைதந்துஇரப்போர் ஏந்துகை நிறையப் புரப்போர்புலம்பில் உள்ளமொடு புதுவதந் துவக்கம்அரும்பொருள் வேட்டம் எண்ணிக் கறுத்தோர்சிறுபுன் கிளவிச் செல்லல் பாழபடநல்லிசை தம்வயின் நிறுமார் வல்வேல்வான வரம்பன் நன்னாட் டும்பர்வேனில் நீடிய வெங்கடற் றடைமுதல்ஆறுசெல் வம்பலர் வேறுபிரிந் தலறக்கொலைவெம் மையின் நிலைபெயர்ந்த துறையும்பெருங்களிறு தொலைச்சிய இருகேழ் ஏற்றைசெம்புல மருங்கிற் றன்கால் வாங்கிவலம்படு வென்றியோடு சிலம்பகஞ் சிலம்பப்படுமழை உருமின் முழங்கும்நெடுமர மருங்கின் மலையிறந் தோரே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்குந் தோழிக்குச் சொல்லியது. · நக்கீரனார் பாடியது