அன்னச் சேவலே · பிசிராந்தையார்
திணை: பாடாண் · துறை: இயன்மொழி · பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்
அன்னச் சேவல் ! அன்னச் சேவல் !ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்,கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்மையல் மாலை யாம் கையறுபு இனையக்,குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி,வடமலைப் பெயர்குவை ஆயின், இடையதுசோழ நன்னாட்டுப் படினே, கோழிஉயர் நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ,வாயில் விடாது கோயில் புக்கு, எம்பெருங் கோக் கிள்ளி கேட்க, இரும்பிசிர்ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின்இன்புறு பேடை அணியத், தன்அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே-
திணை: பாடாண் · துறை: இயன்மொழி · பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்