நாணமும் பாசமும் · கழாஅத் தலையார்
திணை: பொதுவியல் · துறை: கையறுநிலை. சிறப்பு: புறப்புண்பட்டோர் நாணி வடக்கிருந்து உயிர்விடும் மரபு · பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சேரலாதன்
மண்முழா மறப்பப், பண் யாழ் மறப்பஇருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்பச்,சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப,உழவர் ஓதை மறப்ப, விழவும்அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப,உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து,இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்,தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்தபுறப்புண் நாணி, மறத்தகை மன்னன்வாள் வடக்கு இருந்தனன்; ஈங்கு,நாள்போல் கழியல, ஞாயிற்றுப் பகலே!
திணை: பொதுவியல் · துறை: கையறுநிலை. சிறப்பு: புறப்புண்பட்டோர் நாணி வடக்கிருந்து உயிர்விடும் மரபு · பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சேரலாதன்