பாடல் 63 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 63 · என்னாவது கொல்? · பரணர்

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி,விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே;விறற் புகழ் மாண்ட புரவி எல்லாம்மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே;தேர்தர வந்த சான்றோர் எல்லாம்,தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே;விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்,பொறுக்குநர் இன்மையின், இருந்துவிளிந் தனவே;சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென,வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே,என்னா வதுகொல் தானே; கழனிஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்பாசவல் முக்கித், தண்புனல் பாயும்,யாணர் அறாஅ வைப்பின்காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே?
பகிர்
கதை

என்னாவது கொல்? · பரணர்

திணை: தும்பை · துறை: தொகை நிலை · பாடப்பட்டோன்: சோழன் வேற்ப·றடக்கைப் பெருவிறற் கிள்ளி · குறிப்பு: இருவரும் பொருது களத்தில் வீழ்ந்த போது பாடியது. திணை: தும்பை. துறை : தொகை நிலை