மழலையும் பெருமையும் · ஔவையார்
திணை: தும்பை · துறை: இயன் மொழி · பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்குஅருள்வந் தனவால், புதல்வர்தம் மழலை;என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்கடி மதில் அரண்பல கடந்துநெடுமான் அஞ்சி! நீ அருளல் மாறே.
திணை: தும்பை · துறை: இயன் மொழி · பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி