எமக்கு ஈத்தனையே · ஔவையார்
திணை: தும்பை · துறை: வாழ்த்தியல் · பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி
வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை,ஆர்கலி நறவின், அதியர் கோமான்போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னிநீல மணிமிடற்று ஒருவன் போலமன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்பெருமலை விடரகத்து அருமிசை கொண்டசிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,ஆதல் நின்னகத்து அடக்கிச்,சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.
திணை: தும்பை · துறை: வாழ்த்தியல் · பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி