வழிநினைந்து இருத்தல் அரிதே · மாறோக்கத்து நப்பசலையார்
திணை: பொதுவியல் · துறை: ஆந்தப் பையுள்
என்னை மார்பிற் புண்ணும் வெய்யநடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்;நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா;துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்;அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்;நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா;துடிய! பாண ! பாடுவல் விறலி!என்ஆ குவிர்கொல் ? அளியிர்; நுமக்கும்இவண் உறை வாழ்க்கையோ, அரிதே ! யானும்மண்ணுறு மழித்தலைத் , தெண்ணீர் வாரத்,தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல்சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்கழிகல மகளிர் போல,வழிநினைந்து இருத்தல், அதனினும் அரிதே!
திணை: பொதுவியல் · துறை: ஆந்தப் பையுள்