பாடல் 281 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 281 · நெடுந்தகை புண்ணே · அரிசில் கிழார்

தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ,வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக்,கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி;ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,இசைமணி எறிந்து, காஞ்சி பாடி,நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்,காக்கம் வம்மோ-காதலந் தோழீ!வேந்துறு விழுமம் தாங்கியபூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே!
பகிர்
கதை

நெடுந்தகை புண்ணே · அரிசில் கிழார்

திணை: காஞ்சி · துறை: பேய்க் காஞ்சி