நெடுந்தகை புண்ணே · அரிசில் கிழார்
திணை: காஞ்சி · துறை: பேய்க் காஞ்சி
தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ,வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக்,கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி;ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,இசைமணி எறிந்து, காஞ்சி பாடி,நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்,காக்கம் வம்மோ-காதலந் தோழீ!வேந்துறு விழுமம் தாங்கியபூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே!
திணை: காஞ்சி · துறை: பேய்க் காஞ்சி