Keerthi Thiruvagaval · Thiruvasagam · Manikkavasagar

Keerthi Thiruvagaval

திருவாசகம் 2 · தில்லை மூதூர் ஆடிய திருவடி

தில்லை மூதூர் ஆடிய திருவடிபல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகிஎண்இல் பல்குணம் எழில்பெற விளங்கிமண்ணும் விண்ணும் வானோர் உலகும்துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5என்னுடை இருளை ஏறத்துரந்தும்அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 10கல்லா டத்துக் கலந்து இனிது அருளிநல்லா ளோடு நயப்புறவு எய்தியும்பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும்கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15விராவு கொங்கை நல்தடம் படிந்தும்கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்துஉற்ற ஐம் முகங்களால் பணித்து அருளியும் 20நந்தம் பாடியில் நான் மறையோனாய்அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும்வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும்நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகிஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக் 25கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக்குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசைச்சதுர்படச் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்வேலம் புத்தூர் விட்டேறு அருளிக்கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர்வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும்மொக்கணி அருளிய முழுத்தழல் மேனிசொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் 35நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்ஆண்டுகொண்டருள அழகுறு திருவடிபாண்டியன் தனக்குப் பரிமாவிற்றுஈண்டு கனகம் இசையப் பெறா அதுஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத் 40தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளிஇந்திர ஞாலம் காட்டிய இயல்பும்மதுரைப் பெருநல் மாநகர் இருந்துகுதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 45ஆங்கது தன்னில் அடியவர்க்கு ஆகப்பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்உத்தர கோச மங்கையுள் இருந்துவித்தக வேடங் காட்டிய இயல்பும்பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் 50தூவண மேனி காட்டிய தொன்மையும்வாத வூரினில் வந்து இனிது அருளிப்பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகிக்கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் 55பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப்பாவம் நாசம் ஆக்கிய பரிசும்தண்ணீர்ப் பந்தல் சயம்பெற வைத்துநல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் 60குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்குஅட்ட மாசித்தி அருளிய அதுவும்வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டுகாடு அது தன்னில் கரந்த கள்ளமும் 65மெய்க் காட்டிட்டு வேண்டு உருக் கொண்டுதக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்ஓரி ஊரில் உகந்து இனிது அருளிபாரிரும் பாலகன் ஆகிய பரிசும்பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்கோவார் கோலம் கொண்ட கொள்கையும்தேன் அமர் சோலைத் திரு ஆரூரில்ஞானம் தன்னை நல்கிய நன்மையும்இடைமருது அதனில் ஈண்ட இருந்து 75படிமப் பாதம் வைத்த அப்பரிசும்ஏகம் பத்தில் இயல்பாய் இருந்துபாகம் பெண்ணோடு ஆயின பரிசும்திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்துமருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப்பாவகம் பலபல காட்டிய பரிசும்கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்ஐயாறு அதனில் சைவன் ஆகியும் 85துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும்கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் 90குற்றாலத்துக் குறியாய் இருந்தும்அந்தமில் பெருமை அழல் உருக் கரந்துசுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டுஇந்திர ஞாலம் போலவந்து அருளிஎவ்வெவர் தன்மையும் தன்வயின் படுத்துத் 95தானே ஆகிய தயாபரன் எம் இறைசந்திர தீபத்துச் சாத்திரன் ஆகிஅந்தரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும்மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 100அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்எம் தமை ஆண்ட பரிசு அது பகரின்ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உருநீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும் 105ஆனந் தம்மே ஆறா அருளியும்மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன்நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் 110மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்தூய மேனிச் சுடர்விடு சோதிகாதலன் ஆகிக் கழுநீர் மாலைஏறு உடைத்தாக எழில்பெற அணிந்தும்அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் 115பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும்மீண்டு வாராவழி அருள் புரிபவன்பாண்டி நாடே பழம்பதி ஆகவும்பக்தி செய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன்உத்தர கோச மங்கை ஊர் ஆகவும் 120ஆதி மூர்த்திகளுக்கு அருள்புரிந்து அருளியதேவ தேவன் திருப் பெயர் ஆகவும்இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்திஅருளிய பெருமை அருள்மலை யாகவும்எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும் 125அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டருளிநாயினேனை நலம்மலி தில்லையுள்கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎனஏல என்னை ஈங்கு ஒழித் தருளிஅன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் 130ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும்எய்த வந்திலாதார் எரியில் பாயவும்மாலது வாகி மயக்கம் எய்தியும்பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும்கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி 135நாத நாத என்று அழுது அரற்றிபாதம் எய்தினர் பாதம் எய்தவும்பதஞ்சலிக் கருளிய பரமநாடக என்றுஇதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்எழில்பெறும் இமயத்து இயல்புஉடை அம்பொன் 140பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில்கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்குஅருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகைஇறைவன் ஈண்டிய அடியவ ரோடும்பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் 145ஒலிதரு கைலை உயர்கிழ வோனே

Thillai moothoor aatiya thiruvati / Pal uyir ellaam payinranan aaki / Enil palkunam ezhilpera vilangki / Mannum vinnum vaanoar ulakum / Thunniya kalvi thoarriyum azhiththum 5 / Ennutai irulai aeraththuranthum / Atiyaar ullaththu anpu meethoorak / Kutiyaak konta kolkaiyum sirappum / Mannum maamalai makaenthiram athanil / Sonna aakamam thoarruviththu aruliyum 10 / Kallaa taththuk kalanthu inithu aruli / Nallaa loatu nayappuravu eythiyum / Panjsap palliyil paalmozhi thannotum / Enjsaathu eentum inarul vilaiththum / Kiraatha vaetamotu kinjsuka vaayaval 15 / Viraavu kongkai nalthatam patinthum / Kaevaetar aakik kelirathu patuththum / Maavaettu aakiya aakamam vaangkiyum / Marravai thammai makaenthiraththu irunthu / Urra aim mukangkalaal paniththu aruliyum 20 / Nantham paatiyil naan maraiyoanaay / Anthamil aariyanaay amarnthu aruliyum / Vaeru vaeru uruvum vaeruvaeru iyarkaiyum / Nooru nooru aayiram iyalpinathu aaki / Aeru utai eesan ippuvaniyai uyyak 25 / Kooru utai mangkaiyum thaanum vantharulik / Kuthiraiyaik kontu kutanaatu athanmisais / Sathurpatas saaththaayth thaan ezhuntharuliyum / Vaelam puththoor vittaeru arulik / Koalam polivu kaattiya kolkaiyum 30 / Tharppanam athanil saantham puththoor / Vilporu vaetarku eentha vilaivum / Mokkani aruliya muzhuththazhal maeni / Sokkathu aakak kaattiya thonmaiyum / Ariyotu piramarku alavu ari onnaan 35 / Nariyaik kuthirai aakkiya nanmaiyum / Aantukontarula azhakuru thiruvati / Paantiyan thanakkup parimaavirru / Eentu kanakam isaiyap peraa athu / Aantaan emkoan arulvazhi iruppath 40 / Thoontu soathi thoarriya thonmaiyum / Anthanan aaki aantukontaruli / Inthira njaalam kaattiya iyalpum / Mathuraip perunal maanakar irunthu / Kuthirais saevakan aakiya kolkaiyum 45 / Aangkathu thannil atiyavarkku aakap / Paangkaay man sumantharuliya parisum / Uththara koasa mangkaiyul irunthu / Viththaka vaetang kaattiya iyalpum / Poovanam athanil polinthu irunthu arulith 50 / Thoovana maeni kaattiya thonmaiyum / Vaatha voorinil vanthu inithu arulip / Paathas silampoli kaattiya panpum / Thiru aar perunthurais selvan aakik / Karu aar soathiyil karantha kallamum 55 / Poovalam athanil polinthu inithu arulip / Paavam naasam aakkiya parisum / Thanneerp panthal sayampera vaiththu / Nalneers saevakan aakiya nanmaiyum / Virunthinan aaki venkaatu athanil 60 / Kurunthin keezh anriruntha kolkaiyum / Patta mangkaiyil paangkaay irunthu angku / Atta maasiththi aruliya athuvum / Vaetuvan aaki vaentu uruk kontu / Kaatu athu thannil karantha kallamum 65 / Meyk kaattittu vaentu uruk kontu / Thakkaan oruvan aakiya thanmaiyum / Oari ooril ukanthu inithu aruli / Paarirum paalakan aakiya parisum / Paantoor thannil eenta irunthum 70 / Thaevoorth thenpaal thikazhtharu theevil / Koavaar koalam konta kolkaiyum / Thaen amar soalaith thiru aarooril / Njaanam thannai nalkiya nanmaiyum / Itaimaruthu athanil eenta irunthu 75 / Patimap paatham vaiththa apparisum / Aekam paththil iyalpaay irunthu / Paakam pennoatu aayina parisum / Thiruvaanjsiyaththil seerpera irunthu / Maruvaar kuzhaliyotu makizhntha vannamum 80 / Saevakan aakith thinsilai aenthip / Paavakam palapala kaattiya parisum / Katampoor thannil itampera irunthum / Eengkoay malaiyil ezhilathu kaattiyum / Aiyaaru athanil saivan aakiyum 85 / Thuruththi thannil aruththiyoatu irunthum / Thiruppanai ooril viruppan aakiyum / Kazhumalam athanil kaatsi kotuththum / Kazhukkunru athanil vazhukkaathu irunthum / Purampayam athanil arampala aruliyum 90 / Kurraalaththuk kuriyaay irunthum / Anthamil perumai azhal uruk karanthu / Sunthara vaetaththu orumuthal uruvukontu / Inthira njaalam poalavanthu aruli / Evvevar thanmaiyum thanvayin patuththuth 95 / Thaanae aakiya thayaaparan em irai / Santhira theepaththus saaththiran aaki / Antharaththu izhinthu vanthu azhaku amar paalaiyul / Suntharath thanmaiyotu thuthainthu iruntharuliyum / Manthira maamalai makaenthira verpan 100 / Antham il perumai arul utai annal / Em thamai aanta parisu athu pakarin / Aarral athuvutai azhakamar thiru uru / Neerruk koati nimirnthu kaattiyum / Oonam thannai orungkutan arukkum 105 / Aanan thammae aaraa aruliyum / Maathil kooruutai maapperum karunaiyan / Naathap perumparai navinru karangkavum / Azhukku ataiyaamal aantukontu arulpavan / Kazhuk katai thannaik kaikkontu aruliyum 110 / Moolam aakiya mummalam arukkum / Thooya maenis sutarvitu soathi / Kaathalan aakik kazhuneer maalai / Aeru utaiththaaka ezhilpera aninthum / Ariyotu piramarku alavu ariyaathavan 115 / Parimaavin misaip payinra vannamum / Meentu vaaraavazhi arul puripavan / Paanti naatae pazhampathi aakavum / Pakthi sey atiyaaraip paramparaththu uyppavan / Uththara koasa mangkai oor aakavum 120 / Aathi moorththikalukku arulpurinthu aruliya / Thaeva thaevan thirup peyar aakavum / Irul katinthu aruliya inpa oorthi / Aruliya perumai arulmalai yaakavum / Epperun thanmaiyum evvevar thiramum 125 / Apparisu athanaal aantukontaruli / Naayinaenai nalammali thillaiyul / Koalam aartharu pothuvinil varukaena / Aela ennai eengku ozhith tharuli / Anru utan senra arulperum atiyavar 130 / Onra onra utan kalanthu aruliyum / Eytha vanthilaathaar eriyil paayavum / Maalathu vaaki mayakkam eythiyum / Poothalam athanil purantuveezhnthu alariyum / Kaalvisaiththu oatik katalpuka manti 135 / Naatha naatha enru azhuthu ararri / Paatham eythinar paatham eythavum / Pathanjsalik karuliya paramanaataka enru / Itham salippeytha ninru aengkinar aengkavum / Ezhilperum imayaththu iyalpuutai ampon 140 / Politharu puliyoorp pothuvinil natam navil / Kanitharu sevvaay umaiyotu kaalikku / Aruliya thirumukaththu azhaku uru sirunakai / Iraivan eentiya atiyava roatum / Politharu puliyoor pukku inithu arulinan 145 / Olitharu kailai uyarkizha voanae

Share

பொருள்

தில்லையாகிய பழம்பதியில் ஆடிய திருவடியை உடைய இறைவன், பல உயிர்களிலும் கலந்து நின்று, எண்ணற்ற பல குணங்களோடு அழகுற விளங்கி, மண்ணையும் விண்ணையும் தேவர் உலகையும் பொருந்திய கல்விகளையும் தோற்றுவித்தும் அழித்தும், என் அறியாமை இருளை முழுதும் ஓட்டியும், அடியார் உள்ளத்தில் அன்பு பெருகும்படி அங்கே குடிகொண்ட கொள்கையும் சிறப்பும் இவை:

நிலைபெற்ற பெரிய மகேந்திர மலையில் தான் சொன்ன ஆகமங்களைத் தோற்றுவித்து அருளியும்; கல்லாடத்தில் இனிது கலந்து அருளி நல்லாளாகிய உமையோடு அன்புற்றும்; பஞ்சப்பள்ளியில் பால் போன்ற மொழியுடைய அம்மையோடு குறைவில்லாத இன்னருளை விளைவித்தும்; வேடன் கோலத்தோடு முள்முருக்கம்பூ போன்ற சிவந்த வாயுடைய அம்மையின் அருகில் இருந்தும்; வலைஞனாகி மீனைப் பிடித்தும்; பெரிய வேட்டையால் ஆகிய ஆகமங்களைப் பெற்றும்; மற்ற ஆகமங்களை மகேந்திர மலையில் இருந்து தம் ஐந்து முகங்களால் அருளியும்; நந்தம்பாடியில் நான்மறை அந்தணனாய், முடிவில்லாத ஆசிரியனாய் அமர்ந்து அருளியும்;

வேறு வேறு உருவும் வேறு வேறு இயல்பும் கொண்டு, நூறு நூறாயிரம் தன்மையுடையவனாகிக் காளையை உடைய ஈசன் இவ்வுலகம் உய்ய, தன் கூறாகிய மங்கையோடு வந்து அருளி; குதிரைகளைக் கொண்டு மேற்கு நாட்டின் மீது வணிகக் கூட்டத்தின் தலைவனாகத் தானே எழுந்தருளியும்; வேலம்புத்தூரில் வேலாயுதத்தை அருளி அழகிய கோலத்தைக் காட்டியும்; சாந்தம்புத்தூரில் வில்லேந்திய வேடனுக்குக் கண்ணாடியில் அருள் செய்தும்; மொக்கணியில் அருளிய முழு நெருப்பு மேனியைப் பொன்னாகக் காட்டியும்; திருமாலும் பிரமனும் அளவறிய முடியாதவன் நரியைக் குதிரையாக்கிய நன்மையும்;

ஆட்கொண்டு அருள, அழகிய திருவடியையுடையவன் பாண்டியனுக்குக் குதிரை விற்று, அதற்குரிய பொன்னைப் பெறாமல், என்னை ஆண்ட எம் தலைவன் அருள் வழியில் நிற்க, சுடர் விடும் சோதியைத் தோற்றுவித்ததும்; அந்தணனாகி ஆட்கொண்டு இந்திரஜாலம் காட்டியதும்; பெரிய மதுரை மாநகரில் குதிரைச் சேவகன் ஆனதும்; அங்கேயே அடியவளுக்காக மண் சுமந்ததும்; உத்தரகோசமங்கையில் இருந்து அறிவு மிக்க கோலத்தைக் காட்டியதும்; பூவணத்தில் இருந்து தூய பொன் மேனியைக் காட்டியதும்; வாதவூரில் வந்து திருவடிச் சிலம்பொலியைக் கேட்பித்ததும்; அழகிய பெருந்துறைச் செல்வனாகிக் கருவாய் நின்ற சோதியில் ஒளிந்ததும்; பூவலத்தில் பாவங்களை அழித்ததும்; தண்ணீர்ப் பந்தல் வைத்து நல்ல நீர் வழங்கும் சேவகன் ஆனதும்; விருந்தினனாகி வெண்காட்டில் குருந்த மரத்தின் கீழ் இருந்ததும்; பட்டமங்கையில் எட்டுச் சித்திகளை அருளியதும்; வேடுவனாகி விரும்பிய உருவம் கொண்டு காட்டில் ஒளிந்ததும்; உண்மையைக் காட்டி வேண்டிய உருவில் தக்கான் ஒருவனாக வந்ததும்; ஓரியூரில் விரும்பி வந்து சிறு பாலகன் ஆனதும்; பாண்டூரில் தங்கியதும்; தேவூரின் தென்புறத்துத் தீவில் அரசக் கோலம் கொண்டதும்; தேன் நிறைந்த சோலைகள் உடைய திருவாரூரில் ஞானம் தந்ததும்; இடைமருதில் தங்கித் திருவடியை வைத்ததும்; ஏகம்பத்தில் பெண்ணொரு பாகனானதும்; திருவாஞ்சியத்தில் மணமுடைய கூந்தலாளோடு மகிழ்ந்ததும்; சேவகனாகி வலிய வில்லேந்திப் பல கோலங்கள் காட்டியதும்; கடம்பூரில் இடம் கொண்டதும்; ஈங்கோய்மலையில் அழகு காட்டியதும்; ஐயாற்றில் சைவனானதும்; துருத்தியில் விருப்போடு இருந்ததும்; திருப்பனையூரில் விருப்பனானதும்; கழுமலத்தில் காட்சி கொடுத்ததும்; கழுக்குன்றில் தவறாது இருந்ததும்; புறம்பயத்தில் பல அறங்களை அருளியதும்; குற்றாலத்தில் அடையாளமாய் இருந்ததும்.

முடிவில்லாத பெருமையுடைய நெருப்பு உருவை மறைத்து, அழகிய கோலத்தில் ஒப்பற்ற முதல் உருவைக் கொண்டு, இந்திரஜாலம் போல வந்து அருளி, எல்லாருடைய இயல்பையும் தன்வயப்படுத்தித் தானே எல்லாமாகிய கருணையாளன் எம் இறைவன்; சந்திரதீபத்தில் சாத்திரனாகி, வானிலிருந்து இறங்கி வந்து அழகிய பாலைநிலத்தில் அழகோடு நெருங்கி இருந்தும்; மந்திரப் பெருமலையாகிய மகேந்திர மலையை உடையவன், முடிவில்லாத பெருமையும் அருளும் உடைய அண்ணல், எம்மை ஆண்ட விதத்தைச் சொன்னால்:

ஆற்றல் மிக்க அழகிய திருவுருவில் திருநீற்றுக் கோட்டை நிமிர்த்துக் காட்டியும்; குறைகளை ஒருசேர அறுக்கும் ஆனந்தத்தையே வழியாக அருளியும்; உமையைக் கூறாக உடைய பெருங்கருணையன் நாதப் பெரும்பறை முழங்கவும்; அழுக்கு அடையாமல் ஆண்டு அருள்பவன் கழுக்கடையைக் கையில் கொண்டும்; மூலமாகிய மும்மலங்களை அறுக்கும் தூய மேனியையுடைய ஒளிவிடும் சோதி, அன்பனாகிக் கழுநீர் மாலையை அழகுபெற அணிந்தும்; திருமாலும் பிரமனும் அளவறியாதவன் குதிரையின் மேல் வந்த விதமும்; மீண்டு வாராத வழியை அருள்பவனுக்குப் பாண்டி நாடே பழம்பதியாகவும்; பக்தி செய்யும் அடியாரை மேலான நிலையில் சேர்ப்பவனுக்கு உத்தரகோசமங்கையே ஊராகவும்; முதல் தெய்வங்களுக்கும் அருள் செய்த தேவதேவன் என்பதே திருப்பெயராகவும்; இருளை ஓட்டிய இன்ப ஊர்தியையுடையவனுக்கு அருளிய பெருமையுடைய அருள்மலை என்பது பெயராகவும் நின்றவன்;

எந்தப் பெருந்தன்மையையும் எல்லாருடைய திறத்தையும் அவ்வகையில் ஆண்டு அருளி, நாயினேனாகிய என்னை, 'நலம் நிறைந்த தில்லையுள் அழகிய பொதுவில் வருக' என்று சொல்லி, என்னை இங்கே விட்டு நீங்கி அருளினான். அன்று அவனோடு சென்ற அருள்பெற்ற அடியார்கள் ஒன்றாக அவனுடன் கலந்தனர். அவ்வாறு அடைய முடியாதவர்கள் நெருப்பில் பாய்ந்தனர்; பித்துப்பிடித்து மயங்கினர்; நிலத்தில் புரண்டு விழுந்து அலறினர்; கால் விசைத்து ஓடிக் கடலில் புகப் பாய்ந்தனர்; 'நாதா நாதா' என்று அழுது அரற்றினர்; அவனது பாதம் அடைந்தவர் பாதம் அடைந்தனர். 'பதஞ்சலிக்கு அருளிய பரம நாடகனே' என்று இதயம் தளர நின்று ஏங்கினவர்கள் ஏங்கவும், அழகிய இமயத்தின் இயல்புடைய பொன்னால் பொலியும் புலியூர்ப் பொதுவில் நடனம் புரியும், கனிபோன்ற சிவந்த வாயுடைய உமையோடு காளிக்கும் அருளிய திருமுகத்தில் அழகிய புன்னகையுடைய இறைவன், கூடிய அடியாரோடு அழகிய புலியூருள் புகுந்து இனிது அருளினான்; ஒலிக்கும் கயிலையின் உயர்ந்த தலைவன் அவனே.

Meaning

The Lord whose holy feet danced in the ancient town of Thillai mingled with all the many lives, shone in beauty with countless qualities, brought forth and dissolved the earth, the sky, the world of the gods and all the learning bound up with them, drove away my darkness completely, and made his home in the hearts of his devotees so that their love overflowed. These are his ways and his glories:

On the great and lasting Mount Mahendra he revealed the Agamas he had spoken. At Kalladam he dwelt in sweetness and grew close to the gracious Goddess. At Panchappalli he brought forth unending grace with her whose speech is like milk. In a hunter's guise he stayed beside her whose lips are red as the kinjuka flower. He became a fisherman and caught the great fish. He received the Agamas that had come through a great hunt. From Mahendra he gave the other Agamas through his five faces. At Nandampadi he sat as a Brahmin of the four Vedas, a teacher without end.

Taking form after form and nature after nature, a hundred hundred thousand kinds, the Lord who rides the bull came with the Goddess who is his half, so that this world might be saved. He led horses as the head of a merchant caravan into the western land. At Velamputhur he gave the spear and showed his glorious form. At Santhamputhur he gave grace to a bow-bearing hunter through a mirror. At Mokkani he showed his body of pure fire as gold. He whom Vishnu and Brahma could not measure did the kindness of turning jackals into horses.

He of the beautiful feet, to claim me, sold horses to the Pandya and did not even take the gold due for them, so that I might stand in the way of grace of my Lord who rules me, and he showed a blazing light. He came as a Brahmin, claimed me and showed a wonder like magic. In great Madurai he became a horseman's servant, and there for his devotee he carried earth. At Uthirakosamangai he showed the guise of wisdom. At Poovanam he showed a body of pure gold. At Vadhavur he let me hear the ringing anklets of his feet. As the treasure of glorious Perunthurai he hid in the light that was the very womb of things. At Poovalam he destroyed sin. He set up a water pavilion in triumph and became a servant giving good water. As a guest at Venkadu he sat beneath the kurundha tree. At Pattamangai he granted the eight great siddhis. As a hunter in the form he wished he hid in the forest. Showing the truth, he took the form he wished and came as a worthy man. At Oriyur he came gladly as a little boy. He stayed at Pandur. On the shining island south of Thevur he took the form of a king. At Thiruvarur of honey-filled groves he gave wisdom. At Idaimaruthu he stayed and set down his feet. At Ekambam he became one whose half is woman. At Thiruvanjiyam he rejoiced with the Goddess of fragrant tresses. As a warrior with a mighty bow he showed many guises. He made his place at Kadambur. On Eengoy hill he showed his beauty. At Aiyaru he became a Saiva. At Thurutthi he stayed with longing. At Thiruppanaiyur he became the beloved. At Kazhumalam he gave his vision. At Kazhukkunram he stayed without fail. At Purambayam he taught many dharmas. At Kutralam he stood as a sign.

Hiding his form of fire whose greatness has no end, taking in a beautiful guise the one first form, coming like magic, bringing everyone's nature under his sway and himself becoming all, is our compassionate Lord. At Chandradeepam he became the teacher of the scriptures, came down from the sky and stayed close in beauty in a lovely desert land. And if I tell how he, the lord of the great mountain of mantras, Mahendra, the noble one of endless greatness and grace, ruled us:

In his mighty and beautiful form he raised the mark of holy ash and showed it. He gave bliss itself as the way that cuts off every flaw at once. The compassionate one who shares his body with the Goddess let the great drum of sacred sound resound. He who rules and gives grace so that no stain clings took up the lowly ones in his hand. The pure-bodied, blazing light that cuts the three root bonds became a lover and wore a garland of red water lilies on his bull for beauty. He whom Vishnu and Brahma could not measure rode upon a horse. For him who grants the road of no return, the Pandya land is his ancient home. For him who brings devotees to the highest state, Uthirakosamangai is his town. 'God of gods, who gave grace even to the first deities' is his holy name, and 'mountain of grace who gave greatness' is his name, he whose blissful mount drove away darkness.

Having ruled every kind of greatness and every kind of person in this way, he said to me, a dog of a man, 'Come to the beautiful hall in Thillai, rich in all good', and left me here. That day the graced devotees who went with him merged into him, one with one. Those who could not reach him leapt into fire, went mad with longing, rolled on the ground and wailed, ran with racing feet and plunged into the sea, wept and cried 'Lord, Lord!', and those who reached his feet reached his feet. While those stood and yearned whose hearts failed, crying 'Supreme dancer who gave grace to Patanjali!', the Lord, with a lovely little smile on the holy face that gave grace to Kali along with Uma of fruit-red lips, who dances in the hall at Puliyur shining with gold as fine as the Himalaya, entered beautiful Puliyur with his gathered devotees and gave grace there. He is the high lord of resounding Kailasa.

சொற்பொருள் Word by word

கீர்த்தி
fame, glorious deeds
மகேந்திரம்
Mount Mahendra, where the Agamas were revealed
கிஞ்சுகம்
the red flower of the palasa tree
கேவேடர்
fishermen
கெளிறு
a large fish
சாத்து
a merchant caravan
மொக்கணி
a shrine name; also a horse's feed bag
இந்திர ஞாலம்
magic, a wondrous show
வித்தக வேடம்
the guise of wisdom
தூவண மேனி
a body of pure gold
கரு ஆர் சோதி
the light that is the source of all
அட்டமா சித்தி
the eight great yogic powers
கழுக்கடை
the lowly, the despised
மும்மலம்
the three bonds: anavam, karma, maya
பொது
the hall, Chitrambalam at Thillai
புலியூர்
Perumpatrappuliyur, Thillai (Chidambaram)
பதஞ்சலி
the sage Patanjali, who saw the dance

விளக்கம்

கீர்த்தித் திருஅகவல் இறைவனின் வரலாற்றுப் பட்டியல் போல் தோன்றினாலும், அதன் உள்ளடக்கம் ஒன்றே: எல்லா இடத்திலும், எல்லா வடிவிலும் இறைவன் இறங்கி வந்து உயிர்களை ஆட்கொள்கிறான். மகேந்திர மலையில் ஆகமம் அருளியது, வலைஞனாகிச் சுறா பிடித்தது, நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது என்று திருவிளையாடல் புராணத்தில் விரிவாக வரும் பல நிகழ்ச்சிகளை மாணிக்கவாசகர் ஓரிரு சொற்களில் சுட்டுகிறார். இவற்றுள் பல அவர் வாழ்விலேயே நடந்தவை. அதனால் இது வெறும் புகழ்ச்சி அல்ல; அனுபவச் சான்று.

நடுவே திருவாரூர், இடைமருது, ஏகம்பம், திருவையாறு, கழுக்குன்றம், குற்றாலம் என்று தமிழ்நாட்டின் பல தலங்கள் வருகின்றன. ஒவ்வொரு தலத்திலும் இறைவன் ஒவ்வொரு அருள் செய்தான் என்று சொல்வதன் மூலம், தமிழ் மண் முழுவதுமே அவன் அருள் நிலம் என்று காட்டுகிறார். 'வேறு வேறு உருவும் வேறு வேறு இயற்கையும் நூறு நூறாயிரம் இயல்பினது ஆகி' என்ற அடி, பகவத் கீதையில் கண்ணன் 'என் தெய்வ வடிவங்கள் நூறு நூறாக, ஆயிரம் ஆயிரமாக உள்ளன' என்று சொல்வதை நினைவூட்டுகிறது.

அகவலின் இறுதிப் பகுதி மிக நெகிழ்ச்சியானது. திருப்பெருந்துறையில் குருவாக வந்த இறைவன் 'தில்லையுள் பொதுவில் வருக' என்று சொல்லி மறைந்தான். உடன் சென்ற அடியார் அவனோடு கலந்தனர்; மற்றவர்கள் நெருப்பில் பாய்ந்தும், கடலில் புகுந்தும், அலறியும் அவனைத் தேடினர். அந்தப் பிரிவின் வலிதான் திருவாசகம் முழுவதும் ஒலிக்கிறது. இறுதியில் பதஞ்சலிக்கும் காளிக்கும் அருளிய தில்லைக் கூத்தனின் புன்னகையோடு அகவல் நிறைகிறது: தேடல் தில்லையில் முடிகிறது.

Explanation

Keerthi Thiruvagaval reads like a list of the Lord's deeds, but it says one thing throughout: in every place and every form the Lord comes down to claim souls. Revealing the Agamas on Mahendra, catching the shark as a fisherman, turning jackals into horses, carrying earth for pittu: Manikkavasagar points in a word or two to events the Thiruvilaiyadal Puranam tells at length. Several happened in his own life, so this is not mere praise but the testimony of one who saw.

In the middle come the shrines of the Tamil land: Thiruvarur, Idaimaruthu, Ekambam, Thiruvaiyaru, Kazhukkunram, Kutralam and more. By naming a grace at each, he shows that the whole Tamil country is ground made holy by the Lord. The line 'form after form and nature after nature, a hundred hundred thousand kinds' recalls Krishna's words in the Bhagavad Gita: 'Behold my divine forms by hundreds and by thousands' (11.5).

The closing lines are deeply moving. The Lord who came as guru at Perunthurai said, 'Come to the hall in Thillai', and vanished. The devotees who went with him merged into him; the rest searched for him by leaping into fire, plunging into the sea, crying aloud. The ache of that parting sounds through the whole of Thiruvasagam. The agaval ends with the smile of the dancer of Thillai, who gave grace to Patanjali and to Kali: the search comes to rest in Thillai.

திருவிளையாடல் புராணம் (பரஞ்சோதி முனிவர்), வலை வீசின படலம்

வலை வீசிய வலைஞன்

கயிலையில் சிவபெருமான் உமையம்மைக்கு வேதப் பொருளை உரைத்துக்கொண்டிருந்தான். அம்மை ஒரு கணம் கவனம் சிதறினாள். 'நீ பரதவர் குலத்தில் பிறப்பாய்' என்று இறைவன் சொன்னான். அதைக் கேட்டுச் சினந்த முருகனும் விநாயகனும் நூல்களைக் கடலில் எறிந்தனர்; நந்தி ஒரு பெரிய சுறாமீனாகி அந்தக் கடலைக் கலக்கினார்.

அம்மை பாண்டி நாட்டுக் கடற்கரையில் பரதவர் தலைவனின் மகளாகப் பிறந்து வளர்ந்தாள். கடலில் ஒரு பெரிய சுறா மீனவர்களின் வலைகளைக் கிழித்து அவர்களை வாட்டியது. 'அந்தச் சுறாவைப் பிடிப்பவனுக்கே என் மகள்' என்று பரதவர் தலைவன் அறிவித்தான்.

அப்போது இறைவனே ஒரு இளம் வலைஞனாக வந்து, வலை வீசி, அந்தச் சுறாவைப் பிடித்துக் கரைக்கு இழுத்தான். சுறாவாக இருந்த நந்தி தம் உருவில் நின்றார். இறைவன் பரதவர் மகளை மணந்து, அவளோடு மீண்டும் தம் உருவில் விளங்கினான். கீர்த்தித் திருஅகவலில் 'கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்' என்று மாணிக்கவாசகர் போற்றுவது இந்த அருட்செயலையே. இறைவன் எந்தக் குலத்திலும், எந்தத் தொழிலிலும் இறங்கி வந்து தன் அடியாரை ஆட்கொள்வான் என்பதே இதன் பொருள்.

Thiruvilaiyadal Puranam of Paranjothi Munivar, the episode of casting the net

The Fisherman Who Cast the Net

On Kailasa, Siva was teaching Uma the meaning of the Vedas. For a moment her attention wandered. 'You will be born among the fisherfolk,' the Lord said. Angered on her behalf, Murugan and Vinayaka threw the sacred books into the sea, and Nandi became a great shark and churned the waters.

The Goddess was born on the Pandya coast as the daughter of the chief of the fishermen and grew up there. Out at sea a huge shark kept tearing the fishermen's nets and tormenting them. The chief announced, 'Whoever catches that shark shall have my daughter.'

Then the Lord himself came as a young fisherman, cast his net, caught the shark and dragged it ashore. The shark stood up as Nandi in his own form. The Lord married the fisherman's daughter and shone once more with her in his true form. When Keerthi Thiruvagaval sings 'he became a fisherman and caught the great fish', it is praising this act of grace. The Lord will come down into any community and any work to claim those who are his.

சிந்தனைக்கு

இறைவன் நூறு நூறாயிரம் வடிவங்களில் வருகிறான் என்கிறார் மாணிக்கவாசகர். இன்று உங்களுக்கு உதவிய எளிய மனிதர்களில் அவனைக் காண முடியுமா?

To reflect on

Manikkavasagar says the Lord comes in a hundred thousand forms. Could you see him in the ordinary people who helped you today?