அவலம் தீரத் தோன்றினாய் · மாறோக்கத்து நப்பசலையார்
திணை: வாகை · துறை: அரச வாகை · பாடப்பட்டோன்: மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்
அணங்குடை அவுணர் கணம்கொண்டுஒளித்தெனச்,சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்துஇடும்பைகொள் பருவரல் தீரக், கடுந்திறல்அஞ்சன் உருவன் தந்து நிறுத்தாங்கு,அர சிழந்து இருந்த அல்லற் காலை,முரசுஎழுந்து இரங்கும் முற்றமொடு, கரைபொருதுஇரங்குபுனல் நெரிதரு மிகுபெருங் காவிரிமல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்,பொய்யா நாவிற் கபிலன் பாடிய,மையணி நெடுவரை ஆங்கண் ஒய்யெனச்செருப்புகல் மறவர் செல்புறம் கண்டஎள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,அருவழி இருந்த பெருவிறல் வளவன்மதிமருள் வெண்குடை காட்டி, அக்குடைபுதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந!விடர்ப்புலி பொறித்த கோட்டைச், சுடர்ப் பூண்,சுரும்பார் கண்ணிப், பெரும்பெயர் நும்முன்ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென்று உணீஇயர்,உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்,ஆறுகொள் மருங்கின் மாதிரம் துழவும்கவலை நெஞ்சத்து அவலந் தீரநீதோன் றினையே-நிரைத்தார் அண்ணல்!கல்கண் பொடியக், கானம் வெம்பமல்குநீர் வரைப்பில் கயம்பல உணங்கக்,கோடை நீடிய பைதறு காலை,இருநிலம் நெளிய ஈண்டி,உரும்உரறு கருவிய மழைபொழிந் தாங்கே!
Anangkutai avunar kanamkontuoliththenas, / Saenvilangku sirappin njaayiru kaanaathu, / Irulkan ketuththa paruthi njaalaththu / Itumpaikol paruvaral theerak, katunthiral / Anjan uruvan thanthu niruththaangku, / Ara sizhanthu iruntha allar kaalai, / Murasuezhunthu irangkum murramotu, karaiporuthu / Irangkupunal neritharu mikuperung kaaviri / Mallal nannaattu allal theerap, / Poyyaa naavir kapilan paatiya, / Maiyani netuvarai aangkan oyyenas / Seruppukal maravar selpuram kanta / Ellaru sirappin mulloor meemisai, / Aruvazhi iruntha peruviral valavan / Mathimarul venkutai kaatti, akkutai / Puthumaiyin niruththa pukazhmaem patuna! / Vitarppuli poriththa koattais, sutarp poon, / Surumpaar kannip, perumpeyar nummun / Eentussey nalvinai yaantussenru uneeiyar, / Uyarnthoar ulakaththup peyarnthanan aakalin, / Aarukol marungkin maathiram thuzhavum / Kavalai nenjaththu avalan theera / Neethoan rinaiyae-niraiththaar annal! / Kalkan potiyak, kaanam vempa / Malkuneer varaippil kayampala unangkak, / Koatai neetiya paitharu kaalai, / Irunilam neliya eenti, / Urumuraru karuviya mazhaipozhin thaangkae!
திணை: வாகை · துறை: அரச வாகை · பாடப்பட்டோன்: மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்