பழநி
பழநி
தந்தம் தந்தம் தந்தம் தந்தம்தனதன தனதன தனதன தனதன ...... தனதானகுன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும்படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர்இந்துஞ் சந்தந் தங்குந் தண்செங்கமலமு மெனவொளிர் தருமுக வநிதையர்கொஞ்சுங் கெஞ்சுஞ் செஞ்சும் வஞ்சஞ்சமரச முறவொரு தொழில்வினை புரிபவர் ...... விரகாலும்கும்பும் பம்புஞ் சொம்புந் தெம்புங்குடியென வளர்தரு கொடியவர் கடியவர்எங்கெங் கெம்பங் கென்றென் றென்றுந்தனதுரி மையதென நலமுட னணைபவர்கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தந்பொருளுள தெவைகளு நயமொடு கவர்பவர் ...... மயலாலும்என்றென் றுங்கன் றுந்துன் புங்கொண்டுனதிரு மலரடி பரவிட மனதினில்நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந்தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெறஇன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந்தமுமிக வருள்பெற விடைதரு விதமுன ...... மருள்வாயேஎங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன்அவன்விடு மதிசய வினையுறு மலகையைவென்றுங் கொன்றுந் துண்டந் துண்டஞ்செயுமரி யொருமுறை யிரணிய வலனுயிர்நுங்குஞ் சிங்கம் வங்கந் தன்கண்துயில்பவ னெகினனை யுதவிய கருமுகில் ...... மருகோனேஒன்றென் றென்றுந் துன்றுங் குன்றுந்தொளைபட மதகரி முகனுடல் நெரிபடடுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண்டிடியென விழுமெழு படிகளு மதிர்படஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென்றொலிசெய மகபதி துதிசெய அசுரரை ...... யடுவோனேஉந்தன் தஞ்சந் தஞ்சந் தஞ்சஞ்சிவனருள் குருபர வெனமுநி வரர்பணியுந்தொந் தந்தொந் தந்தொந் தந்தென்றொலிபட நடமிடு பரனரு ளறுமுகஉண்கண் வண்டுங் கொண்டுந் தங்கும்விரைபடு குரவல ரலர்தரு மெழில்புனை ...... புயவீராஅன்றென் றொன்றுங் கொண்டன் பின்றங்கடியவர் தமையிகழ் சமணர்கள் கழுவினில்அங்கஞ் சிந்தும் பங்கந் துஞ்சும்படியொரு தொகுதியி னுரைநதி யெதிர்படஅன்பின் பண்பெங் குங்கண் டென்பின்அரிவையை யெதிர்வர விடுகவி புகல்தரு ...... திறலோனேஅண்டங் கண்டும் பண்டுண் டும்பொங்கமர்தனில் விஜயவ னிரதமை நடவியதுங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன்தருமகன் முநிதழல் வருதக ரிவர்வலஅங்கங் கஞ்சஞ் சங்கம் பொங்குங்கயநிறை வளமுறு சிவகிரி மருவிய ...... பெருமாளே.
பழநி
பழநி