Song 151 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 151 · பழநி

தந்தத் தனதன தனனா தனனாதந்தத் தனதன தனனா தனனாதந்தத் தனதன தனனா தனனா ...... தனதானகொந்துத் தருகுழ லிருளோ புயலோவிந்தைத் தருநுதல் சிலையோ பிறையோகொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ ...... விழிவேலோகொங்கைக் குடமிரு கரியோ கிரியோவஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோகொங்குற் றுயரல்கு லரவோ ரதமோ ...... எனுமாதர்திந்தித் திமிதிமி திமிதா திமிதோதந்தித் திரிகட கிடதா எனவேசிந்திப் படிபயில் நடமா டியபா ...... விகள்பாலேசிந்தைத் தயவுகள் புரிவே னுனையேவந்தித் தருள்தரு மிருசே வடியேசிந்தித் திடமிகு மறையா கியசீ ...... ரருள்வாயேவெந்திப் புடன்வரு மவுணே சனையேதுண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய்வென்றிக் கொருமலை யெனவாழ் மலையே ...... தவவாழ்வேவிஞ்சைக் குடையவர் தொழவே வருவாய்கஞ்சத் தயனுட னமரே சனுமேவிந்தைப் பணிவிடை புரிபோ தவர்மே ...... லருள்கூர்வாய்தொந்திக் கணபதி மகிழ்சோ தரனேசெங்கட் கருமுகில் மருகா குகனேசொந்தக் குறமகள் கணவா திறல்சேர் ...... கதிர்காமாசொம்பிற் பலவள முதிர்சோ லைகள்சூழ்இஞ்சித் திருமகள் புடைசூ ழருள்சேர்துங்கப் பழநியில் முருகா இமையோர் ...... பெருமாளே.
Share
கதை

பழநி

பழநி

A story

பழநி