பாலை · பெருந்தலைச்சாத்தனார்
பொருள் வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழங்கு வித்தது; உடம்பட்டதூஉமாம். · பெருந்தலைச்சாத்தனார் பாடியது
தன்கடற் பிறந்த முத்தி னாரமுமுனைதிறை கொடுக்குந் துப்பிற் றன்மலைத்தெறலரு மரபிற் கடவுட் பேணிக்குறவர் தந்த சந்தி னாரமுமிருபே ராரமு மெழில்பெற வணியுந் (5)திருவீழ் மார்பிற் றென்னவன் மறவன்குழியிற் கொண்ட மராஅ யானைமொழியி னுணர்த்துஞ் சிறுவரை யல்லதுவரைநிலை யின்றி யிரவலர்க் கீயும்வள்வா யம்பிற் கோடைப் பொருநன் (10)பண்ணி தைஇய பயங்கெழு வேள்வியின்விழுமிது நிகழ்வ தாயினுந் தெற்கேர்புகழிமழை பொழிந்த பொழுதுகொ ளமையத்துச்சாய லின்றுணை யிவட்பிரிந் துறையினோயின் றாக செய்பொருள் வயிற்பட (15)மாசி றூமடி விரிந்த சேக்கைக்கவவின் புறாமைக் கழிக வளவயலழனுதி யன்ன தோகை யீன்றகழனி நெல்லீன் கவைமுத லலங்கனிரம்பகன் செறுவின் வரம்பணையாத் துயல்வரப் (20)புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடையிலங்குபூங் கரும்பி னேர்கழை யிருந்தவெண்குருகு நரல வீசுநுண்பஃ றுவலைய தண்பணி நாளே.
பொருள் வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழங்கு வித்தது; உடம்பட்டதூஉமாம். · பெருந்தலைச்சாத்தனார் பாடியது