பாலை · கல்லாடனார்
வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. · கல்லாடனார் பாடியது
கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின்,வில்லோர் தூணி வீங்கப் பெய்தஅப்புநுனை யேய்ப்ப வரும்பிய விருப்பைச்செப்பட ரன்ன செங்குழை யகந்தோறிழுதி னன்ன தீம்புழற் றுய்வாயுழுதுகாண் டுளைய வாகி யார்கழல்துப்பி னன்ன செங்கோட் டியவினெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்குமத்த நண்ணிய வங்குடிச் சீறூர்க்கொடுநுண் ணோதி மகளி ரோக்கியதொடிமா ணுலக்கைத் தூண்டுரற் பாணிநெடுமால் வரைய குடிஞையோ டிரட்டுங்குன்றுபின் னொழியப் போகி யுரந்துரந்துஞாயிறு படினு மூர்சேய்த் தெனாதுதுனைபரி துரக்குந் துஞ்சாச் செலவினெம்மினும் விரைந்துவல் லெய்திப் பன்மாணோங்கிய நல்லி லொருசிறை நிலைஇப்கன்றுபுகு மாலை நின்றோ ளெய்திக்கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப்பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித்தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோநாணொடு மிடைந்த கற்பின் வாணுதலந்தீங் கிளவிக் குறுமகள்மென்றோள் பெறநசைஇச் சென்றவென் நெஞ்சே.
வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. · கல்லாடனார் பாடியது