பாடல் 7 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 7 · பாலை · கயமனார்

முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கினதலைமுடி சான்ற தண்டழை யுடையையலமர லாயமொ டியாங்கணும் படாஅன்மூப்புடை முதுபதி தாக்கணங் குடையகாப்பும் பூண்டிசிற் கடையும் போகலைபேதை யல்லை மேதையங் குறுமகள்பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தெனவொண்சுடர் நல்லி லருங்கடி நீவித்தன்சிதை வறித லஞ்சி யின்சிலையேறுடை யினத்த நாறுயிர் நவ்விவலைகாண் பிணையிற் போகி யீங்கோர்தொலைவில் வெள்வேல் விடலையொ டென்மகளிச்சுரம் படர்தந் தோளே யாயிடையத்தக் கள்வ ராதொழு வறுத்தெனப்பிற்படு பூசலின் வழிவழி யோடிமெய்த்தலைப் படுதல் செல்லே னித்தலைநின்னொடு வினவல் கேளாய் பொன்னொடுபுலிப்பற் கோத்த புலம்புமணித் தாலியொலிக்குழைச் செயலை யுடைமா ணல்குலாய்சுளைப் பலவின் மேய்கலை யுதிர்த்ததுய்த்தலை வெண்காழ் பெறூஉங்கற்கெழு சிறுகுடிக் கானவன் மகளே.

Mulaimukanj seythana mulleyi rilangkina / Thalaimuti saanra thantazhai yutaiyai / Yalamara laayamo tiyaangkanum pataaan / Moopputai muthupathi thaakkanang kutaiya / Kaappum poontisir kataiyum poakalai / Paethai yallai maethaiyang kurumakal / Pethumpaip paruvath thothungkinai puraththena / Vonsutar nalli larungkati neevith / Thansithai varitha lanji yinsilai / Yaerutai yinaththa naaruyir navvi / Valaikaan pinaiyir poaki yeengkoar / Tholaivil velvael vitalaiyo tenmaka / Lissuram patarthan thoalae yaayitai / Yaththak kalva raathozhu varuththenap / Pirpatu poosalin vazhivazhi yoati / Meyththalaip patuthal sellae niththalai / Ninnotu vinaval kaelaay ponnotu / Pulippar koaththa pulampumanith thaali / Yolikkuzhais seyalai yutaimaa nalku / Laaysulaip palavin maeykalai yuthirththa / Thuyththalai venkaazh perooung / Karkezhu sirukutik kaanavan makalae.

பகிர்
கதை

பாலை · கயமனார்

மகட் போக்கிய செவிலித்தாய் பின் சென்று தான் கானகத்தே கண்டதோர் மகளைக் கண்டு சொல்லியது; நவ்விப் பிணாக்கண்டு சொல்லியதூஉமாம். · கயமனார் பாடியது