பாடல் 2 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 2 · குறிஞ்சி · கபிலர்

கோழிலை வாழைக் கோண்மிகு பெருங்குலையூழுறு தீங்கனி யுண்ணுநர்த் தடுத்தசாரற் பலவின் சுளையொ டூழ்படுலறியா துண்ட கடுவ னயலதுகறிவளர் சாந்த மேறல்செல் லாதுநறுவீ யடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்குங்குறியா வின்ப மெளிதி னின்மலைப்பல்வேறு விலங்கு மெய்து நாடகுறித்த வின்ப நினக்கெவ னரியவெறுத்த வேஎர் வேய்புரை பணைத்தோணிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டிவளு மினைய ளாயிற் றந்தையருங்கடிக் காவலர் சோர்பத னொற்றிக்கங்குல் வருதலு முரிமை பைம்புதல்வேங்கையு மொள்ளிணர் விரிந்தனநெடுவெண் டிங்களு மூர்கொண் டன்றே.
பகிர்
கதை

குறிஞ்சி · கபிலர்

பகற்குறிக்கட் செறிப்பறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. · கபிலர் பாடியது