பாலை · பரணர்
தலைமகன் பிரிவின்கண்வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. · பரணர் பாடியது
திதலை மாமை தளிர்வனப்பு அழுங்கப்புதலிவர் பீரின் எதிர்மலர் கடுப்பப்பசலை பாய்ந்த நுதலேன் ஆகிஎழுதெழில் மழைக்கண் கலுழ நோய்கூர்ந்துஆதி மந்தியின் அறிவுபிறி தாகிப்பேதுற் றிசினே காதலம் தோழிகாய்கதிர் திருகலின் கனைந்துகால் கடுகிஆடுதளிர் இருப்பைக் கூடுகுவி வான்பூக்கோடுகடை கழங்கின் அறைமிசைத் தாஅம்காடிறந் தனரே காதலர் அடுபோர்வீயா விழுப்புகழ் விண்தோய் வியன்குடைஈரெழு வேளிர் இயைந்தொருங் கெறிந்தகழுவுள் காமூர் போலக்கலங்கின்று மாதவர்த் தெளிந்தஎன் னெஞ்சே.
தலைமகன் பிரிவின்கண்வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. · பரணர் பாடியது