பாலை · 1 காவன் முல்லைப் பூதரத்தனார்
தலைமகன் பிரிவின்கண்வேறுபட்ட தலைமகள் சொல்லியது. · 1 காவன் முல்லைப் பூதரத்தனார் பாடியது
தம்நயந்து உறைவோர்த் தாங்கித் தாம்நயந்துஇன்னமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇநகுதல் ஆற்றார் நல்கூர்ந் தோரெனமிகுபொருள் நினையும் நெஞ்சமொடு அருள்பிறிதுஆபமன் வாழி தோழி கால்விரிபுகலைமான் தலையின் முதன்முதல் கவர்த்தகோடலங் கவட்ட குறுங்கால் உழிஞ்சில்தாறுசினை விளைந்த நெற்றம் ஆடுமகள்அரிக்கோற் பறையின் ஐயென வொலிக்கும்பதுக்கைத் தாய செதுக்கை நீழற்கள்ளி முள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க்குமணியோர்த் தன்ன தெண்குரல்கணிவாய்ப் பல்லிய காடிறந் தோரே.
Thamnayanthu uraivoarth thaangkith thaamnayanthu / Innamar kaelirotu aemurak kezheei / Nakuthal aarraar nalkoorn thoarena / Mikuporul ninaiyum nenjamotu arulpirithu / Aapaman vaazhi thoazhi kaalviripu / Kalaimaan thalaiyin muthanmuthal kavarththa / Koatalang kavatta kurungkaal uzhinjil / Thaarusinai vilaintha nerram aatumakal / Arikkoar paraiyin aiyena volikkum / Pathukkaith thaaya sethukkai neezhar / Kalli mullaraip porunthis sellunarkku / Maniyoarth thanna thenkural / Kanivaayp palliya kaatiran thoarae.
தலைமகன் பிரிவின்கண்வேறுபட்ட தலைமகள் சொல்லியது. · 1 காவன் முல்லைப் பூதரத்தனார் பாடியது