பாலை · எயினந்தை மகனார் இளங்கீரனார்
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. · எயினந்தை மகனார் இளங்கீரனார் பாடியது
அன்பும் மடனுஞ் சாயலும் இயல்பும்என்பும் நெகிழ்க்குங் கிளவியும் பிறவும்ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கிஇன்றே யிவண மாகி நாளைப்புதலிவர் ஆடமைத் தும்பி குயின்றஅகலா அந்துளை கோடை முகத்தலின்அகலா அந்துளை கோடை முகத்தலின்நீர்க்கியங் கினநிரைப் பின்றை வார்கோல்ஆய்க்குழற் பாணியின் ஐதவந் திசைக்குந்தேக்கமல் சோலைக் கடறோங் கருஞ்சுரத்துயாத்த தூணித் தலைதிறந் தவைபோற்பூத்த இருப்பைக் குழைபொதி குவியிணர்கழல்துளை முத்திற் செந்நிலத்து உதிரமழைதுளி மறந்த அங்குடிச் சீறூர்ச்சேக்குவங் கொல்லோ நெஞ்சே பூப்புனைபுயலென ஒலிவருந் தாழிருங் கூந்தல்செறிதொடி முன்கைநங் காதலிஅறிவஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே.
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. · எயினந்தை மகனார் இளங்கீரனார் பாடியது