நெய்தல் · மதுரை மருதனிள நாகனார்
இரவுக்குறிவந்து நீங்குச் தலைமகனை யெதிர்ப்பட்டுத் தோழி சொல்லியது. · மதுரை மருதனிள நாகனார் பாடியது
ஊருஞ் சேரியும் உடனியைந் தலரெழத்தேரொடு மறுகியும் பணிமொழி பயிற்றியும்கெடாஅத் தீயின் உருகெழு செல்லூர்க்கடாஅ யானைக் 1குழுஉச்சமந் ததையமன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்முன்முயன் றரிதினின் முடித்த வேள்விக்கயிறரை யாத்த காண்டகு வனப்பின்அருங்கடி நெடுந்தூண் போல யாவருங்காண லாகா மாணெழி லாகம்நெடும்புற 2நிலையினை வருந்தினை யாயின்முழங்குகட லோதங் காலைக் கொட்கும்பழம்பல் நெல்லின் ஊணூ ராங்கண்நோலா 3இரும்புள் போல நெஞ்சமர்ந்து15.காதல் மாறாக் காமர் புணர்ச்சியின்இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலைமுடங்குபுற இறவோ டினமீன் செறிக்கும்நெடுங்கதிர்க் கழனித் தண்சாய்க் கானத்துயாணர்த் தண்பணை யுறுமெனக் கானல்ஆய மாய்ந்த சாயிறைப் பணைத்தோள்நல்லெழில் சிதையா வேமஞ்சொல்லினித் தெய்யயாந் தெளியு மாறே.
Oorunj saeriyum utaniyain thalarezhath / Thaerotu marukiyum panimozhi payirriyum / Ketaaath theeyin urukezhu selloork / Kataaa yaanaik 1kuzhuussaman thathaiya / Manmarungku aruththa mazhuvaal netiyoan / Munmuyan rarithinin mutiththa vaelvik / Kayirarai yaaththa kaantaku vanappin / Arungkati netunthoon poala yaavarung / Kaana laakaa maanezhi laakam / Netumpura 2nilaiyinai varunthinai yaayin / Muzhangkukata loathang kaalaik kotkum / Pazhampal nellin oonoo raangkan / Noalaa 3irumpul poala nenjamarnthu15. / Kaathal maaraak kaamar punarssiyin / Irungkazhi mukantha sengkoal avvalai / Mutangkupura iravoa tinameen serikkum / Netungkathirk kazhanith thansaayk kaanaththu / Yaanarth thanpanai yurumenak kaanal / Aaya maayntha saayiraip panaiththoal / Nallezhil sithaiyaa vaemanj / Sollinith theyyayaan theliyu maarae.
இரவுக்குறிவந்து நீங்குச் தலைமகனை யெதிர்ப்பட்டுத் தோழி சொல்லியது. · மதுரை மருதனிள நாகனார் பாடியது