குறிஞ்சி · கபிலர்
தோழி தலைமகளை இடத்துய்த்து வந்து பகற்குறிநேர்ந்த வாய் பாட்டால் தலைமகனை வரைவுகடாயது. · கபிலர் பாடியது
கிளைபா ராட்டுங் கடுநடை வயக்களிறுமுளைதரு பூட்டி வேண்டு2குள கருத்தவாள்நிற உருவின் ஒளிறுபு மின்னிப்பரூஉவுறைப் பஃறுளி சிதறிவான் நவின்றுபெருவரை நளிர்சிமை அதிர வட்டித்துப்புயலேறு உரைஇய யிலிருள் நடுநாள்விறலிழைப் பொலிந்த காண்பின் சாயல்தடைஇத் திரண்டநின் தோள்சேர்பு அல்லதைப்படாஅ வாகுமெங் கண்ணென நீயும்இருண்மயங் கியாமத் தியவுக்கெட விலங்கிவரிவயங் கிரும்புலி வழங்குநர்ப் பார்க்கும்பெருமலை விடரகம் 3வரலரி தென்னாய்வரவெளி தாக எண்ணுதி அதனான்நுண்ணிதிற் கூட்டிய படுமாண் ஆரந்தண்ணிது கமழும் நின்மார்பு ஒருநாள்அடைய முயங்கே மாயின் யாமும்விறலிழை நெகிழச் சாஅய்தும் அதுவேஅன்னை யறியினும் அறிக அலர்வாய்அம்பல் மூதூர் கேட்பினுங் கேட்கவண்டிறை கொண்ட எரிமருள் தோன்றியொடுஒண்பூ வேங்கை கமழுந்தண்பெருஞ் சாரல் பகல்வந் தீமே.
Kilaipaa raattung katunatai vayakkaliru / Mulaitharu pootti vaentu2kula karuththa / Vaalnira uruvin olirupu minnip / Paroouvuraip paஃruli sitharivaan navinru / Peruvarai nalirsimai athira vattiththup / Puyalaeru uraiiya yilirul natunaal / Viralizhaip polintha kaanpin saayal / Thataiith thirantanin thoalsaerpu allathaip / Pataaa vaakumeng kannena neeyum / Irunmayang kiyaamath thiyavukketa vilangki / Varivayang kirumpuli vazhangkunarp paarkkum / Perumalai vitarakam 3varalari thennaay / Varaveli thaaka ennuthi athanaan / Nunnithir koottiya patumaan aaran / Thannithu kamazhum ninmaarpu orunaal / Ataiya muyangkae maayin yaamum / Viralizhai nekizhas saaaythum athuvae / Annai yariyinum arika alarvaay / Ampal moothoor kaetpinung kaetka / Vantirai konta erimarul thoanriyotu / Onpoo vaengkai kamazhun / Thanperunj saaral pakalvan theemae.
தோழி தலைமகளை இடத்துய்த்து வந்து பகற்குறிநேர்ந்த வாய் பாட்டால் தலைமகனை வரைவுகடாயது. · கபிலர் பாடியது