பாலை · 2தாயங்கண்ணனார்
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. · 2தாயங்கண்ணனார் பாடியது
வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்இனமழை தவபம் ஏற்றரு நெடுங்கோட்டுஓங்குவெள் ளருவி வேங்கடத் தும்பர்க்கொய்குழை யதிரல் வைகுபுலர் அலரிசுரியிரும் பித்தை சுரும்புபடச் சூடிஇகல்முனைத் தரீஇய ஏறுடைப் பெருநிரைநனைமுதீர் நறவின் நாட்பலி கொடுக்கும்வால்நிணப் புகவின் வடுகர் தேஎத்துநிழற்கவி னிழந்த நீரில் நீளிடைஅழலவில் அருஞ்சுரம் நெடிய வென்னாதுஅகற லாய்ந்தன ராயினும் பகல்செலப்பல்கதிர் வாங்கிய படுசுடர் அமையத்துப்பெருமரங் கொன்ற கால்புகு வியன்புனத்துஎரிமருள் கதிர திருமணி யிமைக்கும்வெல்போர் வானவன் கொல்லிக் குடவரைவேயொபக் கன்ன சாயிறைப் பணைத்தோள்பெருங்கவின் சிதைய நீங்கி ஆன்றோர்அரும்பெறல் உலகம் அமிழ்தொடு பெறினஞ்சென்றுதாம் நீடலோ இலரே யென்றுங்கலம்பெயக் கவிழ்ந்த கலத்தொடித் தடக்கைவலம்படு வென்றி வாய்வாட் சோழர்இலங்குநீர்க் காவிரி யிழபுனல் வரித்தஅறலென நெறிந்த கூந்தல்
Vinainavil yaanai virarpoarth thontaiyar / Inamazhai thavapam aerraru netungkoattu / Oangkuvel laruvi vaengkatath thumpark / Koykuzhai yathiral vaikupular alari / Suriyirum piththai surumpupatas sooti / Ikalmunaith thareeiya aerutaip perunirai / Nanaimutheer naravin naatpali kotukkum / Vaalninap pukavin vatukar thaeeththu / Nizharkavi nizhantha neeril neelitai / Azhalavil arunjuram netiya vennaathu / Akara laaynthana raayinum pakalselap / Palkathir vaangkiya patusutar amaiyaththup / Perumarang konra kaalpuku viyanpunaththu / Erimarul kathira thirumani yimaikkum / Velpoar vaanavan kollik kutavarai / Vaeyopak kanna saayiraip panaiththoal / Perungkavin sithaiya neengki aanroar / Arumperal ulakam amizhthotu perinanj / Senruthaam neetaloa ilarae yenrung / Kalampeyak kavizhntha kalaththotith thatakkai / Valampatu venri vaayvaat soazhar / Ilangkuneerk kaaviri yizhapunal variththa / Aralena nerintha koonthal
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. · 2தாயங்கண்ணனார் பாடியது