குறிஞ்சி · பரணர்
அல்லகுறிப்பட்டு நீங்குந் தலைமகன் தன் நெஞ்சினை 1நெருங்கிச் · பரணர் பாடியது
தாவில் நன்பொன் தைஇய பாவைவிண்தவழ் இளவெயில் கொண்டநின் றன்னமிகுகவின் எய்திய தொகுகுரல் ஐம்பால்கிளையரில் நாணல் கிழங்குமணற் கீன்றமுளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்நயவன் தைவருஞ் செவ்வழி நல்யாழ்இசையோர்த் தன்ன இன்தீங் கிளவிஅணங்குசால் அரிவையை நசைஇப் பெருங்களிற்றுஇனம்படி நீரில் கலங்கிய பொழுதில்பெறலருங் கரைய ளென்னாய் வைகலும்இன்னா அருஞ்சுரம் நீந்தி நீயேஎன்னை யின்னற் படுத்தனை மின்னுவசிபுவிரவுமொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇப்படைநிலா இலங்குங் கடல்மருள் தானைமட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன்பொருமுரண் பெறாஅது விலங்குசினஞ் சிறந்துசெருச்செய் முன்பொடு முந்நீர் முற்றிஓங்குதிரைப் பௌவம் நீங்க வோட்டியநீர்மாண் எஃகம் நிறத்துச்சென் றழுத்தக்கூர்மதன் அழியரோ நெஞ்சே ஆனாதுஎளிய ளல்லோள் கருதிவிளியா எவ்வந் தலைத்தந் தோயே.
அல்லகுறிப்பட்டு நீங்குந் தலைமகன் தன் நெஞ்சினை 1நெருங்கிச் · பரணர் பாடியது