பாடல் 208 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 208 · குறிஞ்சி · -பரணர்

யாம இரவின் நெடுங்கடை நின்றுதேமுதிர் சிமையக் குன்றம் பாடும்நுண்கோல் அகவுநர் வேண்டின் வெண்கோட்டுஅண்ணல் யானை ஈயும் வண்மகிழ்வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலைஇழையணி யானை யியல்தேர் மிஞிலியொடுநண்பகல் உள்ள செருவில் புண்கூர்ந்துஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தெனப் புள்ளொருங்குஅங்கண் விசம்பின் விளங்கு ஞாயிற்றுஒண்கதிர் தெறாமைச் சிறகரில் கோலிநிழல்செய்து உழறல் காணேன் யானெனப்படுகளங் காண்டல் செல்லான் சினஞ்சிறந்துபெருவிதுப் புற்ற பல்வேள் மகளிர்குரூஉப்பூம் பைந்தார் அருக்கிய பூசல்வசைவிடக் கடக்கம் வயங்குபெருந் தானைஅகுதை களைதந் தாங்கு மிகுபெயல்நாணுவரை நில்லாக் காம நண்ணிநல்கினள் வாழியர் வந்தே ஓரிபல்பழப் பலவின் பயங்கெழு கொல்லிக்கார்மலர் கடுப்ப நாறும்ஏர்நுண் ஓதி மாஅ யோளே.

Yaama iravin netungkatai ninru / Thaemuthir simaiyak kunram paatum / Nunkoal akavunar vaentin venkoattu / Annal yaanai eeyum vanmakizh / Veliyan vaenmaan aaay eyinan / Aliyiyal vaazhkkaip paazhip paranthalai / Izhaiyani yaanai yiyalthaer minjiliyotu / Nanpakal ulla seruvil punkoornthu / Olvaal mayangkamar veezhnthenap pullorungku / Angkan visampin vilangku njaayirru / Onkathir theraamais sirakaril koali / Nizhalseythu uzharal kaanaen yaanenap / Patukalang kaantal sellaan sinanjiranthu / Peruvithup purra palvael makalir / Kuroouppoom painthaar arukkiya poosal / Vasaivitak katakkam vayangkuperun thaanai / Akuthai kalaithan thaangku mikupeyal / Naanuvarai nillaak kaama nanni / Nalkinal vaazhiyar vanthae oari / Palpazhap palavin payangkezhu kollik / Kaarmalar katuppa naarum / Aernun oathi maaa yoalae.

பகிர்
கதை

குறிஞ்சி · -பரணர்

புணர்ந்து நீங்கும்தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · -பரணர் பாடியது