பாலை · கயமனார்
மகட் போக்கிய தாய் சொல்லியது. · கயமனார் பாடியது
சீர்கெழு வியனகர்ச் சிலம்புநக வியலிஓரை யாயமொடு பந்துசிறி தெறியினும்வாரா யோவென் றோத்திப் பேரிலைப்பகன்றை வான்மலர் பனிநிறைந் ததுபோல்என்பா டுண்டனை யாயின் ஒருகால்நுந்தை பாடும் உண்ணென் றூட்டிப்பிறந்ததற் கொண்டும் சிறந்தவை செய்தியான்நலம்புனைந் தெடுத்தவென் பொலந்தொடிக் குறுமகள்அறனி லாளனோ டிறந்தனள் இனியெனமறந்தமைந் திராஅ நெஞ்சம் நோவேன்பொன்வார்ந் தன்ன வைவால் எயிற்றுச்செந்நாய் வெரீஇய புகருழை யொருத்தல்பொறியரை விளவின் புன்புற விளைபுழல்அழலெறி கோடை தூக்கலற் கோவலர்குழலென நினையும் நீரில் நீளிடைமடத்தகை மெலியச் சாஅய்நடக்குங் கொல்லென நோவல் யானே.
மகட் போக்கிய தாய் சொல்லியது. · கயமனார் பாடியது