பாடல் 310 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 310 · நெய்தல் · நக்கீரனார்

கடுந்தே ரிளையரொடு நீக்கி நின்றநெடுந்தகை நீர்மையை யன்றி நீயும்தொழுதகு மெய்யை அழிவுமுந் துறுத்துப்பன்னாள் வந்து பணிமொழி பயிற்றலின்குவளை யுண்கண் கலுழ நின்மாட்டுஇவளும் பெரும்பே துற்றன ளோருந்தாயுடை நெடுநகர்த் தமர்பா ராட்டக்காதலின் வளர்ந்த மாத ராகலின்பெருமட 2முடையரோ சிறிதே யதனாற்குன்றிற் றோன்றுங் குவவுமணற் சேர்ப்பஇன்றிவண் விரும்பா தீமோ 3சென்றப்பூவிரி புன்னை மீதுதோன்று பெண்ணைக்கூஉங்க ணஃதே தெய்ய ஆங்கண்இளைப்படு பேடை யிரியக் குரைத்தெழுந்துபெருநீர் வேலியெஞ் சிறுநல் லூரே.
பகிர்
கதை

நெய்தல் · நக்கீரனார்

தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி சொல்லியது · நக்கீரனார் பாடியது